கார் பரிசு தேவையா? ஒழுங்கா சம்பளத்தை கொடுங்க.. – சூர்யாவால் பப்ளிக்காக மோதிக் கொண்ட தயாரிப்பாளர்கள்!
விக்னேஷ் சிவனுக்கு கார் பரிசு தேவையா? முதல்ல ஒழுங்கா சம்பளத்தை கொடுங்க.. – சூர்யாவால் பப்ளிக்காக மோதிக்கொண்ட தயாரிப்பாளர்கள்!
‘தானா சேர்ந்த கூட்டம்’ படம் வெற்றிப்படம் என்றும், அதற்குக் காரணம் இயக்குனர் விக்னேஷ் சிவன் தான் என்றும் அவருக்கு இன்னோவா கார் ஒன்றை பரிசாகக் கொடுத்தார் நடிகர் சூர்யா.
அவருடைய இந்த செயலைப் பார்த்த அப்படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் ”இந்தப் படத்தால் எங்களுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அந்தத் தோல்வியை மறைத்து விட்டு இயக்குனருக்கு காரை பரிசாகக் கொடுப்பது சரியல்ல” என்று காட்டமாக விமர்சனம் செய்தனர்.
அந்தச் சூடு ஆறி ஒரு வாரம் ஆகி விட்ட நிலையில் தேவையில்லாமல் கருத்துச் சொல்லி செம சூடு வாங்கியிருக்கிறார் ‘விக்ரம் வேதா’ தயாரிப்பாளர் சசிகாந்த்.
சூர்யா பரிசு கொடுத்தது பற்றி பேசிய ‘விக்ரம் வேதா’ படத்தின் தயாரிப்பாளர் சசிகாந்த் ”ஒரு படம் வெற்றியடைந்து விட்டால் சில சமயங்களில் நாம் மிகவும் உணர்ச்சிவசப்படுகிறோம். மாறாக, அந்த வெற்றியை அமைதியாக வீட்டில் கொண்டாட வேண்டும்.
சினிமாவில் கூட்டாக இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் ஒன்றாக வேலை செய்கிறோம், போராடித் தான் வெற்றியை அடைய முடிகிறது. எனவே அது கொண்டாடப்பட வேண்டியது தான். ஆனால் அதை விளம்பரப்படுத்தி ஆதாயம் தேட நினைப்பதுதான் தவறு. ஒரு முன்னணி நடிகர் அவரது இயக்குநருக்கு ஒரு காரை பரிசளித்துள்ளார். இது தேவையா? என்று பேசினார்.
அவரின் இந்தப் பேச்சைப் பார்த்ததும் கடுப்பான சூர்யாவின் 2 எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பு நிறுவனத்தின் இணை தயாரிப்பாளர் ராஜசேகர் பாண்டியன் ‘தன் படத்தில் பணியாற்றிய நடிகர் மற்றும் இயக்குனருக்கு முழு சம்பளத்தை கூட ஒழுங்காகத் தராத ஒருவர், பரிசுகளைப் பற்றி பேசுகிறார்!! இதுதான் நகைப்புக்குரிய முரண்!!’ என்று ட்விட்டரில் பதிலடி கொடுத்திருக்கிறார்.
பத்த வெச்சுட்டீங்களே சூர்யா!