‘விஜய் தான் தமிழ்நாட்டை ஆள்வார்’! – பிரபல நடிகர் கணிப்பு
தமிழ்நாட்டு அரசியலில் ஏற்பட்டிருக்கும் வெற்றிடத்தை நிரப்ப ஆளாளுக்கு கோடம்பாக்கத்திலிருந்து கிளம்பியபடி இருக்கிறார்கள்.
ஆனால் அந்த லிஸ்ட்டில் இருப்பதாகச் சொல்லப்படும் முன்னணி நடிகர் விஜய்யோ இதுவரை தனது அரசியல் பயணம் குறித்து வாயே திறக்கவில்லை.
இருந்தாலும் தனக்கு அரசியல் ஆர்வம் இருப்பதை வெளிக்காட்டும் விதமாக அண்மைக்காலமாக சமூகப் பிரச்சனைகளைப் பேசும் படங்களாக தேர்வு செய்து நடித்து வருகிறார்.
மகன் விஜய் அரசியலுக்கு வரவேண்டும் என்பது தான் விஜய்யின் அப்பாவும், இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகரின் ஆசை. அப்பா ஆசைப்படுவது வியப்பில்லை.

மூத்த நடிகர் ராதாரவி விஜய்யின் அரசியல் பிரவேசம் நிச்சயம் என்று கருத்து சொல்லியிருப்பது தான் இப்போதையை பரபரப்பு.
விஜய்யுடன் ‘சர்கார்’ படத்தில் நடித்து வரும் ராதாரவி விஜய் தான் தமிழ்நாட்டை ஆள்வார் என்று கூறியிருக்கிறார். மேலும் அவர் “ஜெயலலிதா இருந்த போதே தைரியமாக பல விஷயங்களை செய்தவர் விஜய். அதனால் தான் அவரிடம் எதிர்ப்பை சம்பாதித்தார். தற்போது அவர் இல்லாத போது நான் வருவேன் என கிளம்பி வரவில்லை.
“விஜய் அரசியலில் இறங்கினால், புரட்சித்தலைவரை போல், வருவார். அதற்காக அவரிடம் இருக்கும் சில குணங்களை நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்” என்று சொல்லும் அவர் “திரையுலகை ஆள்வது போல தமிழ்நாட்டையும் ஆள்வீர்கள் விஜய்” என நம்பிக்கையோடு கணித்துக் கூறியிருக்கிறார் ராதாரவி.