வேட்டைக்காரனில் மகன், தெறியில் மகள் : விஜய் அதிரடி திட்டம்

‘தெறி’ படத்தின் படப்பிடிப்ப சில தினங்களுக்கு முன்பு தான் முடித்துக் கொடுத்தார் விஜய்.
அந்தப் படத்தை முடித்த கையோடு தனது 60-வது படத்தை பூஜை போடச்சொல்லிவிட்டு குடும்பத்தோடு ஓய்வெடுக்கப் போய் விட்டார்.
பரதன் இயக்கும் இப்படத்தை விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
முன்னதாக சத்ரியன் படத்தின் ரீமேக் தான் ‘தெறி’ படம் என்று அதிகாரப்பூர்வமற்ற தகவல் வெளிவந்திருக்கும் நிலையில் படத்தைப் பற்றி நம்பக்கூடிய இன்னொரு முக்கியமான தகவலும் வெளியாகியிருக்கிறது.
படத்தில் விஜய்யின் மகளாக மாஜி நடிகை மீனாவின் மகள் நானிகா நடிக்கிறார் என்ற ரகசியத்தை படத்தை ஆரம்பிக்கும் போதே இயக்குநர் அட்லி பத்திரிகையாளர்களிடம் பகிர்ந்து கொண்டார்.
இப்போது இதே படத்தின் விஜய்யின் மகள் திவ்யாவும் ஒரு முக்கியமான கேரக்டரில் நடித்திருக்கிறார் என்கிற தகவல் தான் அது.
ஏற்கெனவே, விஜய்யின் மகன் சஞ்சய், ‘வேட்டைக்காரன்’ படத்தில் விஜய்யுடன் ஓப்பனிங் பாடலில் இணைந்து ஒரு பாடலுக்கு ஆடியிருந்தார். தற்போது விஜய் தனது மகள் திவ்யாவையும் தெறி படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகப்படுத்தியிருக்கிறார்.
எதிர்காலத்தில் விஜய்யின் மகன், மகள் இருவருமே தொடர்ந்து சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டால் அதற்கு தடை சொல்லாமல் அவர்களை ஊக்கப்படுத்தி தன்னைப்போல அவர்களையும் முன்னணி இடத்துக்கு கொண்டு வர வேண்டும் என்பதே விஜய்யின் அதிரடி திட்டமாம்.