விக்ரம்- விமர்சனம்
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய விக்ரம் எதிர்பார்ப்புகளை எந்த அளவிற்கு பூர்த்தி செய்கிறார்? என்றால் Not bad என்பது மட்டும் கன்பார்ம் மிகப்பெரிய போதைப்பொருள் மாஃபியக்களின் திட்டத்தை ரா ஏஜென்ட் ராவோடு ராவாக முறியடிக்கும் வழக்கமான மசாலா கதையே விக்ரம் கதை. அதை தரமான திரைமொழி மூலம் ரசிகர்களை என்கேஜாக வைத்து ஸ்கோர் செய்திருக்கிறார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்
பாலிவுட் மலையாள சினிமாக்கள் போல நமது ஊரிலும் பெரிய நடிகர்கள் ஒரே படத்தில் ஒன்றிணைவது செம்ம மாஸான விசயம். அதை கன கச்சிதமாக இயக்குநர் பயன்படுத்திக் கொள்வது ரொம்பவே பாசிட்டிவான விசயம். அந்தப் பாசிட்டிவ் விசயங்கள் விக்ரம் படத்தில் சாத்தியமாகி இருக்கிறது. கமல், விஜய்சேதுபதி, பகத்பாஷில் மூன்று கேரக்டர்களையும் நச் ரகமாக எழுதியிருக்கிறார் இயக்குநர். கமல் முன்பாதியில் மிகக்குறைவான நேரமே வருகிறார். ஆனால் படமெங்கும் மற்ற கேரக்டர்கள் மூலமாக அவரின் தாக்கத்தை உண்டுபண்ணி வைக்கிறார் லோகேஷ். ஆசானுக்கு மாணவன் செய்த பெருமை இது. பகத்பாஷில் கிட்டத்தட்ட படத்தின் முழு போர்ஷனிலும் வருகிறார் ..சூப்பர். கமலின் நடிப்பைப் பற்றி சொல்லுமுன் அவரின் எனர்ஜி பற்றிச் சொல்லவேண்டும். வாவ் ரகம். எமோஷ்னல் காட்சிகள் இரண்டில் அவரின் நடிப்போ அல்டிமேட். விஜய்சேதுபதி என்ட்ரியும் சரி பினிஷிங்கும் சரி…ப்பா!
பட் மாஸ்டர் ரேஞ்ச் இல்லை என்பதும் உண்மை. ஆச்சர்ய என்ட்ரியில் அதகளப்படுத்தி இருக்கிறார் சூர்யா.
கமல் vs சூர்யா என்ற அடுத்தப் பார்ட் விக்ரமில் இந்தப்பார்ட்டில் இருக்கும் சிலகுறைகள் இருக்காது என நம்புவோம்
அதென்ன சிலகுறைகள்?
ஆக்ஷனில், வன்முறை காட்சிகளில் காட்டியிருக்கும் சிரத்தையை இயக்குநர் கேரக்டர்களின் ஸ்திரத்தன்மையிலும் காட்டியிருக்கலாம். லாஜிக் என்பதை மருந்தளவிற்காகவேணும் யூஸ் செய்திருக்கலாம்.
படத்தின் நீளத்தையும் சற்று குறைத்திருக்கலாம்
படத்தின் டெக்கனிக்கல் டீமில் அனைவருமே கடும் உழைப்பை கொடுத்திருக்கிறார்கள். அன்பறிவ் மாஸ்டர்களின் அனல் தெறிக்கும் ஆக்ஷன் காட்சிகள் ஆசம். க்ரீஸ் கங்காதரனின் ஒளிப்பதிவு விக்ரமை ஹாலிவுட் தரத்திற்கு உயர்த்துகிறது. அனிருத்தின் பின்னணி இசை படத்தை இறுதிவரை உயிர்ப்போடு வைத்திருக்கிறது
சில குறைகள் இருந்தாலும் பல நிறைகள் இருப்பதால் விக்ரமை வரவேற்கலாம்
3/5