யாதும் ஊரே யாவரும் கேளீர்- விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

உலகில் நிலம் என்பது அனைவருக்கும் பொது என்ற கருத்தாக்கத்தை முன் வைத்துள்ள படம்

இலங்கை அகதியாக விஜய்சேதுபதி நடித்துள்ள முதல்படம். இசையில் பெரும் திறமை வாய்ந்த விஜய்சேதுபதி அடுத்தக்கட்ட சாதனைக்காக தன் அடையாளத்தை மறைக்கிறார். இன்னொரு புறம் பழைய பகை ஒன்றிற்காக விஜய்சேதுபதியை அழிக்க முயற்சிக்கிறார் மகிழ்திருமேனி. விஜய்சேதுபதியின் உண்மையான அடையாளம் எப்படி தெரியவருகிறது? மகிழ்திருமேனியின் பகையுணர்வை விஜய்சேதுபதி எப்படி எதிர்கொண்டார்? என்பதற்கான விடையே கதை

ரொம்பவே சிறப்பாக நடிக்க வேண்டிய படத்தில் விஜய்சேதுபதி வழக்கமான படங்களில் வரும் விஜய்சேதுபதியாகவே தெரிகிறார். இலங்கைத் தமிழில் அவர் பேசும்போது அவ்வளவு செயற்கைத் தனம். மேகா ஆகாஷுக்கும் விஜய்சேதுபதிக்குமான காதல் காட்சிகளில் உணர்ச்சி வெளிப்படவே இல்லை. மேகா ஆகாஷ் நடிப்பும் கூட ஓகே ரகம் தான். மகிழ்திருமேனி கேரக்டர் வடிவம் வலிமையாக இல்லாததால் அவரும் பெரிதாக ஈர்க்கவில்லை

Related Posts
1 of 2

படத்தின் பெரும் பில்லராக இருப்பது நிவாஸ்.கே பிரசன்னாவின் இசை. பாடல்களும் சரி பின்னணி இசையும் சரி அட்டகாசமாக மனதோடு பொருந்துகிறது. கொடைக்கானல் அழகையும் திண்டுக்கல் அழகையும் சிறப்பாக காட்டியுள்ளார் ஒளிப்பதிவாளர்

அகதிகளை உறவுகளாய் பார்ப்பதையும், அவர்களுக்கான அங்கீகாரங்களை கொடுக்க வேண்டும் என்பதையும் பேசியிருக்கும் படம் திரைக்கதையில் இன்னும் கவனம் செலுத்தியிருந்தால் கனமான படமாக மனதில் பதிந்திருக்கும்
2.75/5

#YaadhumOoreYaavarumKelir