300 ப்ளஸ் தியேட்டர்கள் : ‘சத்ரியன்’ செய்த சாதனை!
”வீர சிவாஜி” படத்தின் வெற்றிக்குப் பிறகு ‘சுந்தர பாண்டியன்’, ‘இது கதிர்வேலன் காதல்’ வெற்றிப் படங்களின் இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகருடன் ‘சத்ரியன்’ படத்தில் கை கோர்த்திருக்கிறார் விக்ரம் பிரபு.
தமிழ் சினிமாவில் தரமான ஹிட் படங்களை தயாரித்து வரும் சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் டி.ஜி.தியாகராஜன் தயாரித்து வரும் இப்படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக மஞ்சுமா மோகன் நடித்திருக்கிறார். இவர்களுடன் ஐஸ்வர்யா தத்தா, அருள்தாஸ், விஜய் டி.வி. புகழ் காளையன் கவின், போஸ்டர் நந்தகோபால் என பெரிய நட்சத்திரக் கூட்டமே நடித்திருக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.
இந்த வார ரிலீஸ் படங்களில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் இந்தப்படம் ஏற்படுத்தியிருக்கிறது என்பதற்கு இந்தப்படத்தின் வித்தியாசமான கதையம்சம் தான் காரணம் என்று சொன்னால் அது மிகையில்லை.
ஒரு ரெளடியைப் பற்றி கதைதான் இந்தப்படம் என்றாலும் படத்தின் எந்த இடத்திலும் வெட்டு, குத்து, ரத்தம் என வன்முறை இல்லாமல் குடும்பத்தினரோடு பார்க்கும் வகையில் இருக்கும் என்பது தான் சிறப்பு.
அதனாலேயே இந்தப்படத்தைப் பார்த்த சென்சார் போர்டு அதிகாரிகள் படத்தை ஆல் கிளாஸ் ஆடியன்ஸும் பார்த்து ரசிக்கும் விதமாக ‘யு’ சான்றிதழை வழங்கியிருக்கிறார்கள்!
மேலும் ஒன்றிரெண்டு தடவை ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்பட்டும் தள்ளி வரும் சத்ரியன் படம் எப்போது திரைக்கு வந்தாலும் எதிர்பார்ப்பு குறையாது என்பதற்கு இப்படத்துக்கு கிடைத்திருக்கும் தியேட்டர்களின் எண்ணிக்கையைச் சொல்லலாம்.
வருகிற ஜூன் 9-ஆம் தேதி உலகம் முழுக்க வெளியாகும் சத்ரியன் படத்துக்கு விக்ரம் பிரபு நடித்த படங்களிலேயே அதிக எண்ணிக்கையிலான தியேட்டர்களில் வெளியாகும் படம் என்ற பெருமை கிடைத்திருக்கிறது.
ஆமாம், தமிழ்நாட்டில் மட்டும் 300 க்கும் மேலான தியேட்டர்களில் ரிலீசாகும் இந்தப்படம் கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளும் சேர்த்து உலகம் முழுக்க சுமார் 500 தியேட்டர்களில் ரிலீசாகிறது.
இதுவே இப்படத்துக்கு கிடைக்கப்போகும் வெற்றியை உறுதி செய்வதாகத்தான் இருக்கிறது என்கிறது தியேட்டர்கள் வட்டாரம்!