மீண்டும் தமிழ்சினிமாவில் ரீ-எண்ட்ரி கொடுக்கும் ‘டாப்சி’

Get real time updates directly on you device, subscribe now.

‘காஞ்சனா 3′ படத்துக்குப் பிறகு தமிழில் தலை காட்டாத டாப்சி நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘கேம் ஓவர்’ என்ற படத்தின் மூலம் ரீ-எண்ட்ரி கொடுக்கிறார்.

‘இறுதி சுற்று’, ‘விக்ரம் வேதா’, ‘தமிழ்படம் 2’ ஆகிய வெற்றிப் படங்களுக்கு பிறகு, ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் ரிலையன்ஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தை மிகப் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.

இப்படத்தை அஸ்வின் சரவணன் இயக்குகிறார். இவர் ஏற்கனவே நயன்தாரா நடிப்பில் 2015 ஆம் ஆண்டு வெளியான ‘மாயா’ படத்தை இயக்கியவர்

Related Posts
1 of 135

‘தாப்ஸி’ முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகிறது.

“கேம் ஓவர்” படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 11-ம் தேதி சென்னையில் துவங்கியது. மேலும் தமிழ் நாடு மற்றும் தெலுங்கானா, ஆந்திர மாநிலங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.