7 வருட காதலுக்கு ஃபுல் ஸ்டாப்! : விஷால் – வரலட்சுமி உறவு முறிந்ததா?
விஷாலுக்கும், வரலட்சுமிக்கும் எப்படிப்பட்ட உறவு ஓடிக்கொண்டிருக்கிறது என்பது அவர்கள் இருவருக்கும் நெருக்கமாக இருப்பவர்களுக்கு நன்றாகவே தெரியும். அவ்வளவு ஏன்? இருவருக்கும் நெருக்கமாக மீடியாக்களைச் சேர்ந்தவர்களுக்குக் கூட இருவரும் எவ்வளவு தூரத்துக்கு உருகி உருகி காதலித்து வருகிறார்கள் என்பதும் தெரியும்.
அப்படியிருந்தும் இன்றைக்கும் விஷாலைக் கூப்பிட்டு உங்கள் திரும ணம் எப்போது? யாருடன்? என்று கேட்டால் லேசான புன் முறுவலோடு ஓடி விடுவார்.
இப்படி அரசல் புரசலாக பேசப்படும் விஷால் – வரலட்சுமி காதல் விவகாரம் நேற்றோடு முடிவுக்கு வந்து விட்டதாக வரலட்சுமி போட்ட ஒரே ஒரு ட்வீட்டால் பரபரப்பு உண்டானது.
ஏற்கனவே நான் ஒரு லட்சுமிகரமான பெண்ணுடன் தான் திருமணம் செய்வேன். நடிகர் சங்கத்தில் கட்டப்படும் திருமண மண்டபத்தில் எனது திருமணம் நடக்கும் என்று சில மாதங்களுக்கு முன்பு வரை சொல்லி வந்தார் விஷால்.
இந்த நிலையில் “காதல் ஜோடிகள் பிரியும் முறை மிகவும் மோசமாகப் போய்க் கொண்டிருக்கிறது. ஒரு நபர் தனது 7 ஆண்டு கால உறவை தன் மேனேஜர் மூலமாக முறித்துக் கொண்டார். உண்மையான காதல் எங்கே?” என்று தனது ட்வீட்டரில் புலம்பியிருந்தார் வரலட்சுமி.
நடிகை வரலெட்சுமி நேற்று வெளியிட்ட ஒரு ட்வீட்டைத் தொடர்ந்து அவருக்கும் நடிகர் விஷாலுக்கும் இடையேயான காதல் முறிந்துவிட்டதாக கோலிவுட்டில் தகவல் பரவியது. இதனால் விஷால் – வரலட்சுமி காதல் ஜோடி பிரிந்து விட்டதாக எல்லோரும் நினைத்தார்கள். ஆனால் உண்மையில் அது என்னுடைய வாழ்க்கையைப் பற்றிய செய்தி இல்லை. அதற்கும் என் பெர்சனல் வாழ்க்கைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று பதிலளித்திருக்கிறார் வரலட்சுமி.
விஷால் – வரலட்சுமி காதல் கூட ஏழு வருடங்களாகத் தான் இருந்து வந்தது என்பதைப் பார்க்கும் போது பிரிந்த ஜோடி அவர்களாகத்தான் இருக்குமோ என்கிற சந்தேகம் மட்டும் மீடியாக்களை விட்டு அகழவில்லை.