‘விஸ்வாசம்’ படத்தில் அஜீத் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்!

Get real time updates directly on you device, subscribe now.

‘விவேகம்’ வசூல் ரீதியாக படு தோல்வியை சந்தித்தாலும், இயக்குனர் சிவாவுக்கே படம் இயக்கும் வாய்ப்பை நான்காவது முறையாகக் கொடுத்திருக்கிறார் அஜீத்.

அந்த வகையில் சிவாவின் இயக்கத்தில் தயாராகி வரும் ‘விசுவாசம்’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் மிகப்பிரம்மாண்டமான செட் போடப்பட்டு நடைபெற்றது.

அடுத்தகட்ட படப்பிடிப்பு வரும் ஜுன் 22ம் தேதி தொடங்கும் என்று தயாரிப்பு தரப்பில் சொல்லப்படுகிறது.

இதற்கிடையே இப்படத்தில் அஜீத்தின் கேரக்டர் என்னவாக இருக்கும் என்பது பற்றி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு கிளம்பியிருக்கிறது.

Related Posts
1 of 2,268

அஜீத்தின் கதாபாத்திரம் பற்றிய விஷயம் படு சீக்ரெட்டாக இருந்தாலும் படத்தில் அண்ணன், தம்பி என டபுள் ரோலில் நடித்துக் கொண்டிருக்கிறார் அஜீத் என்கிற சந்தோஷ செய்தி கசிந்திருக்கிறது.

இதில் ஒரு கேரக்டருக்கான படப்பிடிப்பு முடிந்திருப்பதாகவும், மற்றொரு கேரக்டருக்காக அஜீத் கெட்டப்பில் சின்னதாக மாற்றம் செய்யப் போவதாகவும் தெரிகிறது. அஜீத்தின் இந்த இரட்டை அவதாரம் அவருடைய ரசிகர்களுக்கு ‘டபுள் ட்ரீட்’ ஆக இருக்குமாம்.

இப்படத்தில் அஜீத்தின் மேல் வைத்துள்ள மரியாதை காரணமான கதை மற்றும் சம்பளம் பற்றி எதுவும் பேசாமலேயே கதாநாயகியாக நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார் நயன்தாரா.