‘விவேகம்’ டீஸரில் என்னென்ன ஸ்பெஷல்? : இதுதாங்க அந்த சீக்ரெட்ஸ்

கடந்த ஒரு மாத காலமாகவே அஜித் ரசிகர்கள் தூக்கத்தைத் தொலைத்து சுறுசுறுப்பாகியிருக்கிறார்கள்.
எல்லாம் வருகிற மே மாதம் 1 ம் தேதி அஜித் பிறந்த நாள் என்பதால் வந்த உற்சாகம் தான் தான்.
ஒரு பக்கம் தல பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடி விட வேண்டுமென்கிற முனைப்பு இருந்தாலும் அன்றைய தினம் அவர் நடித்து வரும் ‘விவேகம்’ படத்தின் டீஸர் வெளியாகுமா என்று காத்திருந்தார்கள். அவர்கள் எதிர்பார்த்தபடியே ‘விவேகம்’ படத்தின் டீஸர் ம்22 1-ம் தேதி வெளியாகும் என்று தயாரிப்பு தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டீஸர் வெளியாக இன்னும் பத்து நாட்களே மிஞ்சியுள்ள நிலையில் ‘விவேகம்’ டீஸரில் என்னென்ன ஸ்பெஷல் இருக்கின்றன என்பது பற்றிய சுவாரஷ்ய தகவல்களும் வெளியாகியிருக்கின்றன.
டீஸரின் முதல் 30 நொடிகள் அனிருத்தின் இசையில் தெறிக்க வைக்கும் இண்டர்நேஷனல் லெவல் தீம் மியூசிக் இருக்கும். அதன் பின்னர் 16 நொடிகளுக்கு அதிர வைக்கும் பிஜிஎம் மற்றும் அஜித் பேசும் ஒரே ஒரு பஞ்ச் வசனம். பிறகு 10 நொடிகளுக்கு படத்தின் ஸ்டைலீசான டைட்டில் கார்டு என மொத்தம் 56 நொடிகள் வரும்படி தயாரிக்கப்பட்டு வருகிறதாம் விவேகம் டீஸர்.
அதுமட்டுமில்லாமல் இந்த முதல் டீஸரில் காஜல் அகர்வால், அக்ஷராஹாசன் சம்பந்தப்பட்ட காட்சிகள் ஒரு ஷாட் கூட இடம்பெறவில்லை. மாறாக ‘வேதாளம்’ டீஸரில் எப்படி அஜித் இடம்பெற்றிருந்தாரோ அதேபோல இதிலும் அஜித் மட்டுமே காட்சியளிப்பாராம்.
ஆக வருகிற மே 1-ம் தேதியை அஜித் ரசிகர்கள் அதிர வைக்கப்போவது உறுதி.