அதி மேதாவிகளுக்காக 10 நாட்களில் எடையைக் குறைத்த இஷாரா!

Get real time updates directly on you device, subscribe now.

ishara

‘சதுரங்க வேட்டை’ படத்தில் நட்டிக்கு ஜோடியாக நடித்தவர் இஷாரா நாயர். அதில் இவர் ஏற்று நடித்த பானு என்கின்ற வெகுளி கதாபாத்திரம் ரசிகர்களின் உள்ளங்களையும் கொள்ளை அடித்து சென்றது. அந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது ‘அதி மேதாவிகள்’ படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் இஷாரா.

அறிமுக இயக்குநர் ரஞ்சித் மணிகண்டன் இயக்கி, ‘அப்சலூட் பிச்சர்ஸ்’ சார்பில் மால்காம் தயாரித்திருக்கும் இந்த ‘அதி மேதாவிகள்’ திரைப்படத்தில், பிரபல தொகுப்பாளர் சுரேஷ் ரவி (மோ படப் புகழ்) கதாநாயகனாக நடித்திருக்கிறார்.

“நான் முன்பு நடித்த கதாபாத்திரத்தின் சாயல் என்னுடைய புதிய கதாபாத்திரத்திற்கு இருக்கக் கூடாது என்பதில் நான் மிகவும் கவனமாக இருந்து தேர்வு செய்த திரைப்படம் தான் ‘அதி மேதாவிகள்’. இந்த படத்தில் சுஜி என்கின்ற கதாபாத்திரத்தில் நான் நடித்து இருகின்றேன். இரண்டு நண்பர்கள் தங்களின் கல்லூரியில் வைக்கும் அரியர்ஸ் பற்றியும், அந்த அரியர்ஸை கடந்து வர அவர்கள் எடுக்கும் முயற்சிகளும் தான் அதி மேதாவிகள் படத்தின் ஒரு வரி கதை.

இந்த படத்திற்காக என்னை உடல் எடையை குறைக்க சொன்னார் இயக்குநர் ரஞ்சித் மணிகண்டன். அதற்கு அவர் கொடுத்த கால அவகாசம் வெறும் 10 நாட்கள் தான். இருந்தாலும் இதை நான் சவாலாக எடுத்து கொண்டு, 10 நாட்களில் உடல் எடையை குறைத்தேன். மற்ற எல்லா படங்களில் இருந்தும் இந்தப்படம் வித்தியாசமாக இருக்கும் என்பதற்கு காதல் இல்லாமல் வெறும் நட்பை மட்டுமே இயக்குநர் காட்சிப்படுத்தியிருப்பதே காரணம். பட ரிலீசை ஆவலோடு எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றேன்” என்று உற்சாகமாக கூறுகிறார் ‘அதி மேதாவிகள்’ படத்தின் கதாநாயகி இஷாரா நாயர்.