‘ஏ.கே 57’ வில்லன் ஆனார் விவேக் ஓபராய்! : அஜித் ரசிகர்களுக்கு எக்ஸ்ட்ரா ஹேப்பி…
‘வீரம்’, ‘வேதாளம்’ படங்களின் வெற்றிக்குப் பிறகு அஜித்தை வைத்து ஏ.கே 57 படத்தை இயக்கி வருகிறார் இயக்குநர் சிவா.
ரசிகர்கள் எதிர்பார்ப்பதை விட கொஞ்சம் எக்ஸ்ட்ராவாகவே தனது படங்களில் மசாலாவைத் தூவி விட்டதாலோ என்னவோ சென்ற ஆண்டு அதிக வசூலை அள்ளிய படங்களின் லிஸ்ட்டில் வேதாளம் படத்துக்குத்தான் முதலிடம் கிடைத்தது.
அந்த வசூல் நிலவரமே மீண்டும் அஜித் தனது அடுத்த படத்தை இயக்குகிற வாய்ப்பை சிவாவுக்கே கொடுத்து விட்டார்.
சத்யஜோதி பிலிம்ஸ் அதிக பொருட்செலவில் தயாரித்து வரும் இப்படத்தில் காஜல் அகர்வால், கமலின் இளைய மகள் அக்ஷரா ஹாசன் ஆகியோர் நடித்து வருகிறார்கள்.
முக்கால்வாசி படம் வெளிநாடுகளில் படமாக்கப்படுவதால் முதல்கட்ட படப்பிடிப்பு முழுவதும் ஐரோப்பிய நாடுகளில் நடைபெற்றது.\
படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடிக்க வைக்க இர்பான் கான், ஐஸ்வர்யா ராயின் கணவர் அபிஷேக் பச்சன் உள்ளிட்ட சில பாலிவுட் ஹீரோக்களின் பேச்சு வார்த்தை நடத்திப் பார்த்தார்.
யாருமே பாஸீட்டீவ்வான பதிலைச் சொல்லாத நிலையில் நானிருக்கேன் என்று வில்லனாக நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார் அதே பாலிவுட்டில் பிரபலமான ஹீரோவான விவேக் ஓபராய்!
விவேக் ஓபராய் தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமானவர் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று தான். தமிழ்நாட்டில் கடலூர் உள்ளிட்ட சில ஊர்களை சுனாமி தாக்கிய போது ஓடோடி வந்து உதவியவர்களில் முக்கியமானவர் விவேக் ஓபராய். அதுமட்டுமில்லாமல் பிறந்து வளர்ந்து படித்தது எல்லாமே சென்னை தான்.
இந்த விஷயங்களை பட விழா மேடைகளில் சொல்லி பெருமைப்பட்டவர் தான். இப்படி விவேக் ஓபராய் தமிழ் ரசிகர்களுக்கு ரொம்பவே நெருக்கம் என்பதால் அவரையே வில்லனாக கமிட் செய்து விட்டார் இயக்குநர் சிவா.
‘என்னை அறிந்தால்’ படத்தில் அருண்விஜய்! இந்தப் படத்தில் விவேக் ஓபராய்!!
அப்போ அஜித் ரசிகர்களுக்கு எக்ஸ்ட்ரா ஹேப்பி தான்..!