செவன் – விமர்சனம் #Seven

Get real time updates directly on you device, subscribe now.

RATING – 2.5/5

று இளம் பெண்களின் வாழ்க்கையில் குறுக்கிடும் ஒரு இளைஞனைப் பற்றிய கதை தான் இந்த ”செவன்”.

நந்திதா, அனிஷா, அதிதா மூன்று பேரும் தன் கணவனான ஹீரோ ஹவிஷை காணவில்லை என்று போலீஸ் அதிகாரியான ரகுமானிடம் புகார் கொடுக்கிறார்கள். மூன்று பேர் கொடுக்கும் புகாரும் ஒரே மாதிரியாக இருப்பதால் சந்தேகப்படும் ரகுமான் ஹவிஷ் ஒரு மோசடிக்காரன் என்று முடிவுக்கு வருகிறார்.

தலைமறைவாக இருக்கும் அவரைத் தேடி கிளம்புகிறார். யார் இந்த ஹவிஷ்? அவருக்கும் அந்த மூன்று பெண்களுக்கு என்ன தொடர்பு? உண்மையிலேயே அவர் தான் குற்றவாளியா? என்பதைச் சொல்லுவதே படத்தின் மீதிக்கதை.

ஆறு இளம் பெண்களின் வாழ்க்கையில் குறுக்கிடும் ஒரு இளைஞனைச் சுற்றி பிண்ணப்பட்ட கதை. ஆள் மாறாட்டக்கதையா? அல்லது கிரைம் த்ரில்லரா? அல்லது பேய் பட ரகமா? என்று ரசிகர்களால் ஒரு முடிவுக்கு வர முடியாமல் இந்த மூன்று வகை ஜானர்களையும் ஒரே படத்தில் கொண்டு வர முயற்சித்திருக்கிறார் அறிமுக இயக்குனர் நிஷார் ஷபி.

எல்லோரையும் விட ப்ளாஷ்பேக்கில் வரும் ரெஜினா தான் நடிப்பில் அதிகம் ஸ்கோர் செய்கிறார். அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் திமிரு பட ஹீரோயின் ஷ்ரேயா ரெட்டியை ஞாபகப்படுத்துகிறது. சில நேரங்களில் படையப்பா ரம்யாகிருஷ்ணனையும் ஞாபகப்படுத்துகிறது. ஆனாலும் ரெஜினாவை இப்படி ஒரு கேரக்டரில் பார்ப்பது ரசிகர்களுக்கு புது அனுபவமாக இருக்கும்.

Related Posts
1 of 43

பணக்கார வீட்டுப் பையன் போல வரும் ஹீரோ ஷவிஷ் ப்ளாஷ்பேக் காட்சிகளில் நடிப்பில் தேறியிருக்கிறார். முதல் படத்திலேயே நந்திதா ஸ்வேதா, அனிஷா, அதிதி, த்ரிதா சௌத்ரி, புஜிதா என அரை டஜன் ஹீரோயின்களுடன் ரொமான்ஸ் செய்கிற பாக்கியமும் கிடைத்திருக்கிறது.

சரஸ்வதி பாட்டியின் கேரக்டர் திடீரென்று மாறுவது யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்! போலீஸ் கேரக்டரா? கூப்பிடுங்கள் ரகுமான் என்றாகி விட்டது. இதிலும் ஒரு இன்வஸ்டிகேஷன் ஆபீசராக வருகிறார். எல்லாம் சரி, அந்த சிகரெட்டையும், குடியையும் மட்டும் தவிர்த்திருக்கலாம்.

ஒரு இன்வஷ்டிகேஷன் த்ரில்லர் என்றால் காட்சிகளில் உண்மைத் தன்மை முக்கியம். அது இந்தப் படத்தின் பல காட்சிகளில் லாஜிக் ஓட்டைகளாக தெரிகிறது.

இயக்குனரே படத்தின் ஒளிப்பதிவாளரும் என்பதால் பாடல் காட்சிகளை ரசனையோடு படம் பிடித்திருக்கிறார். சைதன் பரத்வாஜின் பின்னணி இசையும் படத்தின் விறுவிறுப்புக்கு கூடுதல் கியாரண்டி.

என நாம் தமிழில் பார்த்த பல படங்களின் கலவை தான் இந்தப்படம் என்றாலும், காட்சிகளில் அவிழ்க்கப்படும் ட்விஸ்ட் முடிச்சுகளும், அதில் உள்ள சின்னச் சின்ன சுவாரஷ்யங்களும் படத்தை ரசிக்க வைக்கிறது.