‘பிக்பாஸ்’ ஏமாற்றிய சென்ராயனை அழைத்து சர்ப்ரைஸ் கொடுத்த சிம்பு!
விஜய் டிவியில் கமல்ஹாசன் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்த நிகழ்ச்சியின் 85-வது நாளில் பொய் சொல்லி தனது காரியத்தை சாதித்துக் கொண்ட ஐஸ்வர்யா தான் வெளியேறியிருக்க வேண்டும். அதுதான் நியாயமானதாகவும் இருந்திருக்கும்.
ஆனால், பாதிக்கப்பட்ட சென்ராயன் ரசிகர்களிடம் குறைவான வாக்குகளைப் பெற்றதாகக் கூறி அந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
இது ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியை தொடர்ச்சியாக பார்த்து வரும் கோலிவுட் பிரபலங்களும், பார்வையாளர்களும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர்கள் சென்ராயனுக்கு தனது ஆதரவினை தெரிவித்ததோடு மட்டுமில்லாமல் இது பெரும் அநியாயம், சீட்டிங், பித்தலாட்டம் என்று கடுமையாக சமூக வலைத்தளங்களில் விமர்சித்து வருகின்றனர்.
அதோடு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல் மீதும் நடுநிலையோடு நடந்து கொள்ளவில்லை என்று விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர்.
இதனால் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி மீதான நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாகியிருக்கும் நிலையில், ‘பிக்பாஸ்’ வீட்டில் இருந்து வெளியேறிய சென்ட்ராயனை தன் வீட்டுக்கு அழைத்து கெளரவப்படுத்தியிருக்கிறார் நடிகர் சிம்பு.
வஞ்கத்தால் வெளியேற்றப்பட்ட சென்ராயனை தனது வீட்டுக்கு அழைத்த நடிகர் சிம்பு திருமூலரின் ‘திருமந்திரம்’ புத்தகத்தில் தமிழில் கையொப்பமிட்டு பரிசளித்துள்ளார். இவர்களது சந்திப்பின் போது அதே ‘பிக்பாஸ்’ வீட்டிலிருந்து வெளியே வந்த நடிகர் மகத்தும் உடனிருந்துள்ளார்.