விஜய் சேதுபதி WWW படத்தின் டீஸரை வெளியிட்டார்!

Get real time updates directly on you device, subscribe now.

பிரபல ஒளிப்பதிவாளர், இயக்குநர் KV குகனின் இயக்கத்தில், ஆதித் அருண், ஷிவானி ராஜசேகர் நடிக்கும் பன்மொழி திரில்லர் திரைப்படமான WWW ( Who, Where,Why) படத்தின், டீஸரை வெளியிட்டுள்ளார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி.

இது குறித்து ஒளிப்பதிவாளர், இயக்குநர் KV குகன் கூறியதாவது…

Related Posts
1 of 8

எங்கள் படமான WWW ( Who, Where,Why) படத்தின் டீஸரை, மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்டது எங்கள் அனைவருக்குமே பெருமை. படத்தின் டீஸர் அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. படம் குறித்து நிறைய விசயங்களை ஆவலுடன் கேட்டறிந்தார். படத்தில் நடித்துள்ள மூத்த நடிகர்களான டாக்டர் ராஜேசேகர், ஜீவிதா தம்பதியின் மகள், ஷிவானி ராஜசேகருடைய நடிப்பையும், அவரது திரைப்பயணம் சிறப்பாக அமையவும் வாழ்த்துக்கள் கூறினார். நடிகர் ஆதித் அருணை அவருக்கு நெடுங்காலமாக தெரியும். நடிப்பின் மீதான ஆதித் அருணின் தீவிரமான காதலையும் கடின உழைப்பையும் வெகுவாக பாராட்டினார். முழுப்படத்தில் அவரது நடிப்பை காண ஆவலாக இருப்பதாக கூறினார். மிக எளிமையான வகையில் இயல்பாக பழகும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் தன்மை எங்களை ஆச்சர்யப்படுத்தியது. அவருக்கு எங்கள் நன்றி.

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகும் இப்படத்தினை இயக்குவதுடன் படத்தின் திரைக்கதையை எழுதி ஒளிப்பதிவும் செய்துள்ளார் KV குகன். Ramantra Creations சார்பில் Dr. ரவி P. ராஜு டட்லா தயாரிக்க விஜய் தரன் டட்லா இணை தயாரிப்பு செய்கிறார். தொடர்ச்சியாக வெற்றிகரமான ஆல்பங்களை தந்து வரும் சைமன்.K.கிங் இப்படத்திற்கு இசையமைக்கிறார். தம்மிராஜு படத்தொகுப்பு செய்ய, KN விஜயகுமார் வசனமெழுதியுள்ளார். பிரேம் ரக்‌ஷித் நடன அமைப்பு செய்ய, மதன் கார்க்கி, கு.கார்த்திக் பாடல்கள் எழுதியுள்ளனர்.