ஜி.வி பிரகாஷூக்காக பாடிய யுவன் ஷங்கர் ராஜா

Get real time updates directly on you device, subscribe now.

YUVAN-SHANKAR

மீபகாலமாக ஒரு இசை அமைப்பாளரின் இசையில் மற்றொரு இசை அமைப்பாளர் பாடுவது என்பது ஒரு கலாச்சாரமாகவும் பழக்கமாகவும் மாறி வருகிறது.

அந்த வகையில் ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படத்துக்காக இசை அமைப்பாளரும் நாயகனுமாகிய ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்க யுவன் ஷங்கர் ராஜா பாடும் பாடல் ஒன்று பதிவானது. இளைஞர்கள் இடையே ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படத்துக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

Related Posts
1 of 12

இந்தப்படத்துக்காக நா.முத்துக்குமாரின் பாடல் வரிகளில் ‘முத்தம் கொடுத்த மாயக்காரி’ என்ற பாடலை யுவன் ஷங்கர் ராஜா குரலில் பாடல் பதிவானது. இந்தப் பாடல் நிச்சயம் இளைஞர்களை கவர்ந்து இழுக்கும் என்பதில் ஐயமே இல்லை. யுவன் ஷங்கர் ராஜாவின் குரலில் உள்ள துள்ளலை, காட்சியிலும் பிரதிபலிக்க வேண்டும் என்ற எங்கள் திட்டம் பலித்து இருக்கிறது.

மனிஷாவும், ஜி.வி.பிரகாஷும் சேர்ந்து போடும் ‘குத்தாட்டம்’ இப்போ செம்ம ஹிட். பட்டி தொட்டி எங்கும் இந்தப் பாடல் தான் எதிரொலிக்கிறது. படத்தின் வெற்றிக்கு இந்த பாடல் பெரிதாக உதவும்’ என நம்பிக்கை தெரிவித்தார் இயக்குனர் ரவிசந்திரன்