ஓவர்… நக்கல்! : ரோபோ சங்கரை ஓரங்கட்டும் தனுஷ்
திறமைசாலிகள் யாராக இருந்தாலும் அவர்களை அப்படியே கொத்திக்கொண்டு வந்து தனது படங்களில் வாய்ப்பு கொடுப்பவர் நடிகர் தனுஷ்.
சிவகார்த்திகேயன், அனிருத், காமெடி நடிகர் சதீஷ் ஆகிய மூவருமே இதற்கு நல்ல உதாரணம். தனுஷ் அறிமுகப்படுத்திய மேற்கண்ட மூன்று பேருமே இப்போது தமிழ்சினிமாவில் நல்ல ரேஞ்சில் இருக்கிறார்கள்.
அப்படித்தான் தனுஷின் கடைக்கண் பார்வை சின்னத்திரைகளில் மட்டுமே காமெடி பண்ணிக் கொண்டிருந்த ரோபோ சங்கர் மீது பதிந்தது.
பொதுவாக தனது படங்களில் காமெடி என்றால் அதற்கு நடிகர் விவேக்கைத்தான் அழைப்பார் தனுஷ். ஆனால் ‘மாரி’ படத்தில் காமெடிக்கு ரோபோ சங்கரை கூப்பிட்டு வாய்ப்பு கொடுத்தார்.
அப்படி வாய்ப்பு கொடுத்த தனுஷை நாலு இடங்களில் நல்ல விதமாக பேசாமல் நக்கலாக கமெண்ட் செய்திருக்கிறார் ரோபோ சங்கர்.
என்ன சொன்னாராம்?
மாரி ரிலீசான ரெண்டாவது நாளே அந்த டீமுடன் நடந்த ரிலீஸ் பார்ட்டியில் கலந்து கொண்ட ரோபோ சங்கர் மாரி படத்துல நான் தான் ஹீரோ, எனக்குத்தான் நெறைய சீன்ஸ். தனுஷ் ஒரு டம்மி பீஸ் மாதிரி தான் வருவாப்ல… என்று செமத்தியாக நக்கலடித்திருக்கிறார்.
ரோபோவின் இந்த கமெண்ட்டைக் கேட்ட யாரோ ஒரு தனுஷ் விசுவாசி அதை அப்படியே தனுஷின் காதுகளுக்கு கொண்டு போய் விட்டார்.
கேள்விப்பட்ட தனுஷ் செம் அப்செட்.
இனிமே தனுஷ் படங்களில் ரோபோ சங்கர் இருப்பாருன்னு நெனைக்கிறீங்க..?