‘2.0’ ஆடியோ விழாவில் இந்த ஸ்பெஷலும் உண்டாம்? : ஷங்கர் வெளியிட்ட ரகசியம்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் – ஷங்கர் இணையும் பிரம்மாண்டப்படமான ‘எந்திரன் 2’ சுமார் 400 கோடி ரூபாய் செலவில் தயாராகி வருகிறது.
ரஜினிகாந்த், எமி ஜாக்சன், அக்ஷய் குமார் மற்றும் பலர் நடித்திருக்கும் இப்படத்துக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா வருகிற அக்டோபர் மாதம் 27-ம் தேதி துபாயில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற உள்ளதால் அதற்கான பணிகள் நடந்து வருகிறது.
அன்றைய தினம் விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ரசிகர்களுக்கு இசை விருந்தும் அளிக்கவும் முடிவு செய்திருக்கிறார்.
இதனால் அந்த விழாவை நடைபெறுகின்ற அன்றைய தினமே உலகம் முழுவதுள்ள ரசிகர்கள் கண்டு மகிழ ஒரு புது ஏற்பாட்டை செய்திருக்கிறார்கள்.
ஆமாம், துபாயிலிருந்து இந்நிகழ்ச்சி நேரலையில் காண்பிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் படம் அடுத்த ஆண்டு ஜனவரி 25-ஆம் தேதி திரைக்கு வர ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
ஏற்கனவே இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழாவை மும்பையில் நடத்திய போது அதை அன்றைய தினமே நேரடியாக இணையதளம் மூலமாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. அது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெறவே ஆடியோ பங்ஷனையும் அதே போல நேரடி ஒளிபரப்பு செய்ய முடிவெடுத்திருக்கிறதாம் தயாரிப்பு நிறுவனம்.