மலேசியா டூ அம்னீஷியா- விமர்சனம்

கட்டிய மனைவியை கெட்டிக்காரத்தனமாக காப்பாற்றிக்கொண்டே சைடில் ஒரு பெட்டிக்கடை போடும் “குட்டி”க்கதை தான் இது. அதில் கொஞ்சம் காமெடி கொஞ்சம் செண்டிமெண்ட் தூவி மலேசியா டூ அம்னீஷியா ஆக்கி இருக்கிறார் இயக்குநர் ராதாமோகன். ராதாமோகன் படமென்றால் அதில் ஒரு மென்மையும் மேன்மையும் ஒருங்கே இருக்கும். இந்தப்படத்தில் அது ஏகத்திற்கும் மிஸ். என்னா சாரே…
மனைவியிடம் மலேசியா போவதாகச் சொல்லிவிட்டு பெங்களூருக்கு காதலியைப் பார்க்கச் செல்கிறார் வைபவ். அவர் மலேசியாவிற்கு சென்ற விமானம் விபத்தில் சிக்கியதாகச் செய்தி வர.. அடுத்தடுத்த பிரச்சனைகளை வைபவ் எப்படிச் சமாளிக்கிறார் என்பதே படத்தின் திரைக்கதை. யெஸ் லைட்டா கமல் நடித்த சதிலீலாவதி படத்தை நினைவுப்படுத்துகிற திரைக்கதை தான்..
நடிகர்களில் இருந்து துவங்கினால் வைபவ் நன் வேலையை நன்முறையில் செய்திருக்கிறார். திருட்டு மாங்காய்க்கு ஆசைப்படும் கேரக்டர் பக்காவாக செட் ஆகிறது அவருக்கு. அடுத்து கருணாகரன் அடித்து ஆடியிருக்கிறார். எம்.எஸ் பாஸ்கர் பாத்திரம் பெரிதாக எழுதப்பட்டதாக நினைத்து படமாக்கியிருந்தாலும் அது எந்த ஈர்ப்பையும் ஏற்படத்தவே இல்லை என்பது தான் நிஜம். வாணிபோஜன் மிக அழகாக ஈர்த்துள்ளார்.
டெக்னிக்கல் டீமில் பாட்டும் பின்னணி இசையும் மகா சொதப்பல். மகேஷ் முத்துசுவாமியின் கேமரா மட்டுமே படத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறது. என்னதான் வசனத்தில் சுவாரசியத்தைக் கூட்டினாலும் படம் 40 நிமிடங்களைத் தாண்டியதும் நொண்டியடிக்கத் துவங்கிடுது. சோ சேடு!
நல்ல லைன் நல்ல நடிகர் இருந்தால் திரைக்கதைக்கு பெரிதாக மெனக்கெட வேண்டாம் என்று அசால்டாக நினைப்பவர்களுக்கு இந்தப்படம் ஒரு பாடம்! மறுபடியும் ஒரு சோ சேடு!
2/5