எனை நோக்கி பாயும் தோட்டா- விமர்சனம்
RATING : 3.5/5
தன் அண்ணனையும் அகம் நுழைந்த காதலியையும் மீட்க பயணிக்கும் ஒரு மாஸ் ஹீரோவின் பயணம் தான் என்னை நோக்கிப் பாயும் தோட்டா.
நான்காண்டுகளுக்கு முன்பு வந்திருக்க வேண்டிய படம். தாமதமாக வந்திருந்தாலும் தரமாகத்தான் வந்திருக்கிறது . சின்னச் சின்ன சொதப்பல்கள் இருந்தாலும் அசத்தலான மேங்கிங் அசரடிக்கிறது நம்மை.
ஒன்றரை மாதங்களுக்கு முன்பு தான் தனுஷ் அசுரத்தன நடிப்பால் நம்மை அசரடித்தார். இதில் டோட்டலாக வேறோர் ஜானரில் வெளுத்திருக்கிறார். மேகா ஆகாஷ் வழக்கம் போல் கெளதம் வாசுதேவ்மேனன் ஹீரோயின்களின் டெம்ப்ளேட் தான். ஆனால் அதில் அவ்ளோ அழகு. இன்னும் கொஞ்சம் நேரம் வருவாரா என்பது போல் சசிகுமார். சுனைனாவும் அந்த கேட்டகிரி தான்.
ஒளிப்பதிவும் பின்னணி இசையும் படத்தின் இன்னொரு பில்லர். ரசிகனை பெரியளவில் ஏமாற்றாத திரைக்கதையும் அங்கங்கே தெறிக்கும் மின்னல் வசனங்களும் சூப்பர். சில இடங்கள் வாய்ஸ் ஓவர் ஓவரா இருக்கோ என்றும் தோன்றுகிறது.
முன்பாதியில் ஒரே சீராக பயணிக்கும் திரைக்கதையின் தோட்டா பின்பாதியில் ஆக்ஷன் மற்றும் திரில்லர் ஜானரில் போகிறது. அது சற்று நம் மனநிலையின் சமநிலையை சோதித்தாலும் இறுதியில் படம் சாதித்து விடுகிறது. அப்படியொரு சாதுர்யமான க்ளைமாக்ஸ்.
முடிவாய் ஒன்று.. லாஜிக் என்ற கண்ணாடியை கழட்டி வைத்துவிட்டுத் தான் இந்தத் தோட்டாக்களை வாங்க வேண்டும்! அப்போது தான் தோட்டா வலிக்காமல் இனிக்கும்.