சீரியல் ஷுட்டிங் துவக்கமா?

Get real time updates directly on you device, subscribe now.

கொரோனா பாதிப்பால் ஏற்பட்டுள்ள ஊரடங்கு ஒரு மாதத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. ஊரடங்கு தளர்வுகளுக்கான வாய்ப்புகள் கூட இருப்பதாகத் தெரியவில்லை என்ற நிலையில் டிவி சேனல்கள் எல்லாம் சீரியல் ஷுட்டிங்கை துவங்கச் சொல்லி இருப்பதாக நடிகை குஷ்பூ நேற்று ஒரு தகவலைத் தெரிவித்தார்.

Related Posts
1 of 3

இதைப்பற்றி தான் மினிஸ்டரிடம் பேசி இருப்பதாகவும், மேலும் ஆர்.கே செல்வமணியிடம் டிஸ்கஸ் செய்திருப்பதாகவும் சொல்லி இருந்தார். ஆனால் நடிகை ராதிகா குஷ்பூவின் கருத்திற்கு உடன்படவில்லை. ராதிகா பேசி அனுப்பிய ஆடியோவில், “எந்த டிவி சேனல்ஸும் ஷுட்டிங் நடத்துங்க என்று சொல்லவில்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போல தங்களின் கதை வேலைகள் அனைத்தையும் செய்து வைத்துக்கொள்ளுங்கள் என்று தான் சேனல்ஸ் சொல்லியிருக்கின்றன” என்றார்