‘ரியா அனகாரிகா’ : பெண் குழந்தைக்கு பெயர் சூட்டினார் ஆரி!

Get real time updates directly on you device, subscribe now.

aari

‘நெடுஞ்சாலை’ நாயகன் ஆரியின் பெண் குழந்தைக்கு லண்டனில் எளிய முறையில் பெயர் சூட்டுவிழா நடைபெற்றது.

ஆரி- நதியா தம்பதியினருக்கு பிப்ரவரி 5ம் தேதியன்று அழகான பெண் குழந்தை பிறந்தது. இந்த ஆண்டின் துவக்கம் முதலே ஜல்லிக்கட்டு முதல், அஞ்சல் வங்கி கணக்கு வரை போராட்டத்திலே இருந்த ஆரி, தன் வீட்டின் குட்டி தேவதையைக் காண லண்டன் சென்றிருந்தார்.

Related Posts
1 of 3

கணவர் வந்த பின் தான் குழந்தைக்கு பெயர் வைக்க வேண்டும் என்பதில் உறுதியாய் இருந்தார் அவரின் மனைவி நதியா.

குடும்பத்தார்கள் சூழ எளிமையான முறையில் பெயர் சூட்டு விழா நடைபெற்றது. ஆரி, நதியா பெயர்களில் உள்ள எழுத்துக்கள் வரும்படியாக குழந்தைக்கு ரியா அனகாரிகா என்று பெயரை சூட்டியிருக்கிறார்கள்..

“எங்கள் வீட்டு தேவதைக்கு உங்கள் அனைவரின் அன்பும் வாழ்த்தும் வேண்டும்” என்று அன்போடு கூறுகிறார் ஆரி!