எஸ்.ஜே சூர்யா படமா? – தயங்கிய பிரியா பவானி சங்கர்

Get real time updates directly on you device, subscribe now.

‘ஒரு நாள் கூத்து’ பட இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் தயாராகியிருக்கும் படம் ‘மான்ஸ்டர்’.

எஸ்.ஜே.சூர்யா ஹீரோவாக நடித்திருக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியா பவானி ஷங்கர் நடித்திருக்கிறார்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பிரியா பவானி சங்கர் படத்தில் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.

Related Posts
1 of 135

விழாவில் அவர் பேசும்போது, ”இந்த படத்தில் கிடைத்த அனுபவம், எஸ்.ஜே.சூர்யா நாயகன் என்றதும் அவருடன் எனக்கு பொருத்தமாக இருக்குமா? என்று தயங்கினேன். ஆனால் இயக்குநர் முதலில் கதை கேட்டு முடிவு செய்யுங்கள் என்று கூறினார்.

ஆனால் படம் முடியும் வரை என்னை பாதுகாப்பாக வைத்திருந்தார். படக்குழுவினருடன் ஜாலியாக பணியாற்றினேன்” என்றார்.