ரஜினியும், கமலும் அரசியலுக்கு வரவே முடியாது! : கணிச்சது யார் தெரியுமா?
தமிழ்நாட்டு அரசியலில் நடக்கும் கூத்தைப் பார்த்தால் ஆளுங்கட்சியிடமிருந்து எங்களை யாராவது வந்து காப்பாற்றுங்கள் என்று மக்கள் கதறாத குறையாகத்தான் தினமும் காமெடிகள் அரங்கேறி வருகின்றன.
குறிப்பாக ரஜினி, கமல் என தமிழ்சினிமாவின் உச்ச நட்சத்திரங்கள் இருவர் மீதும் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஒருபக்கம் ரஜினி வழக்கம் போல சைலண்ட்டாக இருந்தாலும், அதற்கு நேர் எதிராக கமலோ தினமும் ட்விட்டரில் ஏதாவது ஒரு கருத்தைப் போட்டு பரபரப்பை கிளப்பிக் கொண்டிருக்கிறார்.
ரஜினி வருவாரோ இல்லையோ நான் கண்டிப்பாக வருவேன், வந்து விட்டேன் என்று முந்தாநாள் வரை தினமும் ஒவ்வொன்றாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார் கமல்.
ஆக இருவரில் யார் வந்தாலும் தமிழக மக்கள் மத்தியில் மிகப்பெரிய ஆதரவு கிடைக்கும் என்று சக அரசியல்வாதிகள் களக்கம் அடைந்தாலும் ஒரே ஒருவர் மட்டும் ரஜினி, கமல் இருவராலும் அரசியலுக்குள் வர முடியாது என்று அடித்துச் சொல்கிறார் நடிகர் விஜய் வசந்த்தின் அப்பாவும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான ஹெச். வசந்தகுமார்.
இதுபற்றி அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது : ‘ரஜினி, கமல் இருவரும் சினிமாவில் தான் இருப்பார்களே தவிர தப்பித்தவறிக் கூட அவர்களால் அரசியலுக்கு வர முடியாது. ஏனென்றால் கீழ்மட்ட அரசியலும், கீழ்மட்ட மக்களின் மனநிலையும் துளி கூட அவர்களுக்குத் தெரியாது. இப்படிப்பட்ட அவர்கள் எப்படி அரசியலுக்கு வரமுடியும்? என்கிறார்.
வர்றதுக்கு முன்னாடியே இப்படி பயந்தா எப்படி?