அடையாளம் இல்லாமல் ஜெயிப்பவர் மாதவன்! : சூர்யா பெருமிதம்

Get real time updates directly on you device, subscribe now.

Mathavan1

‘வேட்டை’ படத்துக்குப் பிறகு பெரிய இடைவெளி விட்ட நடிகர் மாதவன் அந்த கேப்பில் ஹிந்தியில் பிஸியாகி விட்டார்.

சுமார் அந்த 3 வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ‘இறுதிச்சுற்று’ படத்தின் மூலம் தமிழ்சினிமாவுக்குள் ரீ-எண்ட்ரி கொடுத்திருக்கிறார்.

மாதவனுடன் ரித்திகா சிங் நடிக்க சுதா கொங்கரா இயக்கியிருக்கிறார்.

தமிழ், ஹிந்தி இரு மொழிகளில் தயாராகியிருக்கும் இப்படத்தை தமிழில் சி.வி.குமாரும், ஹிந்தியில் ராஜ் குமார் ஹிராணியுடன் இணைந்து

மாதவனும் தயாரித்திருக்கின்றனர். வரும் ஜனவரி 29ம் தேதி யுடிவி நிறுவனம் உலகம் முழுவதும் ரிலீஸ் செய்கிறது.

சந்தோஷ் நாராயணன் இசை என்பதால் ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை கிளப்பி விட்டிருந்த இப்படத்தின் ஆடியோ பங்ஷன் சென்னையில் நடைபெற்றது.

Related Posts
1 of 36

விழாவில் ”தாரை தப்பட்டை” இயக்குநர் பாலா படத்தின் ஆடியோவை வெளியிட, நடிகர் சூர்யா பெற்றுக் கொண்டார். விழாவில் பேசிய சூர்யா மாதவனைப் பற்றி மனம் திறந்து பாராட்டியதோடு அவருக்கும் தனக்கும் உள்ள நட்பைப் பற்றியும் பெருமிதத்துடன் பேசினார்…

”ஒரு ஹீரோன்னா இப்படித்தான் நடிக்கணும்னு ஒரு அடையாளம் இருக்கும். அந்த மாதிரி தனித்த அடையாளம்னு எதுவுமே இல்லாம எந்த மாதிரியான கேரக்டர்கள் பண்ணினா எந்த மாதிரியான நல்ல படங்கள் வரும் என்பதற்கு மாதவன் ஒரு நல்ல உதாரணம்.

நாங்க ரெண்டு பேரும் பேசாத விஷயங்களே கிடையாது. தயங்காமல் பேசுவோம். என்னைப் பார்த்தா எனக்கே கடுப்பா இருக்குது, வேற ஏதாவது தொழில் பண்ணலாம்னு தோணுதுன்னு கூட சொல்லுவேன். எங்க வீட்லேயும் எல்லோரும் அவரோட ரசிகர்கள் தான். என் தங்கச்சிக்கு மாப்பிள்ளை பார்க்கும் போது கூட மாப்பிள்ளைக்கு மாதவனோட ஸ்மைல் இருக்கு ஓ.கேன்னு சொன்னாங்க. எனக்கு பையன் பிறக்கும் போதும் கூட நானும் ஜோவும் அவனோட சிரிப்பைப் பார்த்துட்டு அப்படியே மாதவன் மாதிரியே க்யூட்டா சிரிக்கான்னு சொல்லிப்போம்.

அவர் எந்த மொழியில நடிக்கப் போனாலும் அவர் எப்போதுமே நம்மளோட நிரந்தர சொத்து. என் படமோ கார்த்தி படமோ ரிலீசாகிற நேரத்துல

மாதவனோட படம் ரிலீஸ் ஆச்சுன்னா முதல்ல அவரோட படத்துக்கு தான் என் வீட்ல உள்ளவங்க போவாங்க.
அந்தளவுக்கு அவரை எல்லோரும் லவ் பண்றாங்க.

அவர் ஒரு தவம் மாதிரி இந்தப் படத்தை செஞ்சிருக்கார். வழக்கமா ஒரு படத்துக்கு ஷுட்டிங் போவோம், நடிப்போம் வருவோம், சில படங்கள் அவங்களோட வாழ்க்கையாகவே மாறிப்போயிடும். அப்படி ஒரு படம் தான் இந்த இறுதி சுற்று படமும் அவருக்கு அடையாளமாக இருக்கும்.” என்றார் சூர்யா.