ஓ மை காட்! : தனுஷ் ‘குட்புக்’கிலிருந்து அனிருத் நீக்கம்

Get real time updates directly on you device, subscribe now.

dhanush1

‘‘உண்மையைச் சொல்லப்போனா சிவகார்த்திகேயனுக்கு சம்பளம் கொடுக்கிற அளவுக்கு என்னோட புரொடக்‌ஷன் பெரிய நிறுவனம் இல்லை. அதனால தான் அவரை வெச்சு எங்களால படம் பண்ண முடியல, இருந்தாலும் அவரோட வளர்ச்சியைப் பார்க்கும் போது எனக்கு சந்தோஷமா இருக்கு’’

சிவகார்த்திகேயனை வெச்சு மறுபடியும் படம் எடுப்பீங்களா..? என்கிற கேள்விக்கு ‘தங்கமகன்’ ரிலீஸ் சமயத்தில் கேட்ட கேள்விக்கு தனுஷிடமிருந்து வந்த யதார்த்தமான பதில் தான் இது!

சிவகார்த்திகேயனைப் போலவே ‘பீப் சாங்’ விவகாரத்தில் சிக்கியிருந்த அனிருத் பற்றிய கேள்வியும் எழுந்தது.

”கண்டிப்பா எனக்குத் தெரிஞ்சு அனிருத்தோட மியூசிக் லைப்ரரியில அந்த சாங் இருக்க வாய்ப்பே இல்லை. அவன் நாம வளர்த்து விட்ட பையன். அப்படியெல்லாம் பாட்டு போடுற ஆளும் இல்லை” என்று நூறு சதவீதம் நம்பிக்கையோடு சொன்னார்.

ஆனால் என்றைக்கு கனடாவில் இசை நிகழ்ச்சி முடிந்து நாட்கள் பல ஆகியும் வராமல் கைதுக்கு பயந்து அங்கேயே தங்கினாரோ? அப்போதே அவருக்கும், பீப் சாங்குக்கும் சம்பந்தம் இருக்கிறது என்பது தெள்ளத் தெளிவாகி விட்டது.

Related Posts
1 of 15

தனது நூறு சதவீத நம்பிக்கை நொறுங்கிய பிறகும் தனுஷ் சும்மா இருப்பாரா என்ன?

துரை செந்தில்குமார் இயக்கத்தில் தான் நடிக்கும் புதுப்படமான ”கொடி”யில் இசையமைப்பாளராக இருந்த அனிருத்தை அதிரடியாக நீக்கி விட்டு அவருக்குப் பதில் சந்தோஷ் நாராயணனை கமிட் செய்திருக்கிறார்.

இன்று படப்பிடிப்பு ஆரம்பமாகியிருக்கும் அப்படத்தின் படப்பிடிப்புக்காக பாடல்கள் அவசரமாக தேவைப்பட்டிருக்கிறது. அனிருத்தோ கனடாவை விட்டு வராமலேயே பல நாட்களாக டிமிக்கி கொடுத்துக் கொண்டிருப்பதால் சந்தோஷ் நாராயணனை தேடிப்போக வேண்டிய இக்கட்டான நிலை தனுஷுக்கு ஏற்பட்டதாக சொல்கிறார்கள்.

வருகிற தகவல் அப்படியிருந்தாலும் தனுஷ் ‘குட்புக்’கிலிருந்து அனிருத் நீக்கக் காரணம் ‘பீப் சாங்’ விவகாரம் தான் என்பது தான் உண்மையாம்!

செல்லப்பிள்ளை போல ஒவ்வொரு கட்டத்திலும் பார்த்து பார்த்து வளர்த்தெடுத்த தனுஷே தனது ‘குட்புக்’கிலிருந்து அனிருத்தை ஓரங்கட்ட வேண்டிய நிலை வந்ததைக் கேள்விப்படும் போது ”ஓ மை காட்!” என்பதைத் தவிர வேறென்ன சொல்ல..?