பிரதமரின் வலையில் விழுந்த பிரபலங்கள்

Get real time updates directly on you device, subscribe now.

நேற்று இரவு தமிழ்நாட்டில் ரஜினி சொன்னது போல அதியசம் அற்புதம் நடந்தது!? அந்த அதிசயமும் அற்புதமும் மக்களுக்கானதா என்று தெரியவில்லை. ஆனால் அது பிரதமர் மோடிக்கு சாதகமாக அமைந்து விட்டது. தமிழ்நாட்டில் விளக்கேற்றும் வைபவம் பெரியளவில் நடக்காது என்றே பலரும் நினைத்த வேளையில், பல பிரபலங்களே அதை முதல்வேலையாகச் செய்து பீதியைக் கிளப்பினார்கள்.

Related Posts
1 of 43

குறிப்பாக போயஸ்கார்டனில் ரஜினி தன் மனைவியோடு மெழுகுவர்த்தி ஏந்தி வந்து காட்சி கொடுத்தார். அதன்பின் நயன்தாரா, அருண்விஜய் என பிரபலங்கள் வரிசை கட்டினார்கள். இதனால் விளக்கேற்றுவதை விரும்பாதவர்களும் தான் விரும்பும் நட்சத்திரங்கள் விளக்கேற்றியதால் அதை ரசிக்கும் மனநிலைக்கு வந்து விட்டார்கள். ஆனா இந்த மனநிலை நல்லதுல்ல மக்கா!!