விஜய்யின் முடிவு தான் என்ன?
“என் நெஞ்சுக்குள்ள குடியிருக்கும் நம்ம ஜனம் வெறித்தனம்” என்று பாடிய விஜய் நாடே கோரோனா பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில் ஒரு விழிப்புணர்வு வீடியோ கூட வெளியிடவில்லை. மார்க்கெட்டிலும் சம்பள விசயத்திலும் அவருக்கு அடுத்த நிலையில் இருக்கும் சூர்யா வீடியோப் போட்டதோடு இல்லாமல் அவர் தொழில் சார்ந்த பெப்ஸி ஊழியர்களுக்கும் உதவி இருக்கிறார்.
விஜய் சகப் போட்டியாளர் எனச் சொல்லப்படும் அஜித் மத்திய மாநில அரசுகள் உள்பட பெப்ஸி ஊழியர்களுக்கு சேர்த்து ஒரு கோடியே இருபந்தைந்து லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கியுள்ளார். ஆனால் விஜய் இதுவரை கையைத் திறக்கவே இல்லை. அவர் தனிப்பட்ட முறையில் மக்களுக்கு தன் மக்கள் இயக்கம் மூலமாகச் செய்ய இருக்கிறார் என்று சொல்லி வருகிறார்கள். உரிய நேரத்தில் செஞ்சா தானே அது உதவி?