நிஜ வாழ்க்கையிலும் ஹீரோவான விஷால்!

Get real time updates directly on you device, subscribe now.

vishal1

மிழகத்தில் பல ஆண்டுகள் கழித்து இயற்கை சீற்றத்தால் வந்த பெரும் பாதிப்பு தான் சில வாரங்களுக்கு முன்பு சென்னையை புரட்டிப் போட்ட பெருமழை. இம்மழை வெள்ளத்தால் பல ஆயிரங்கணக்கான மக்கள் அவர்களுடைய வீட்டையும் பொருட்களையும் விட்டு வெளியேறி எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டார்கள் என்பதை வார்த்தைகளால் சொல்லி விட முடியாது.

இந்த நெருக்கடியான சூழலிலும் நல்ல உள்ளம் கொண்ட மனிதர்களையும், மற்றும் உதவி செய்யும் பல தொண்டு நிறுவனங்களையும் நாம் அடையாளம் கண்டோம்.

Related Posts
1 of 66

பல திரையுலக பிரபலங்களும் தங்களால் ஆன உதவிகளை செய்திருந்த நிலையில் நடிகர் விஷால் அவருடைய பெரும்பங்காக மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளையும், வெள்ள நிவாரண பொருட்களையும் வழங்கி இருக்கிறார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மட்டுமில்லாமல், அவர்களை மீட்க திறமையுடனும் தன் குடும்பதை பாராமலும் இரவு பகலாய் பணிபுரிந்த காவல் துறை நண்பர்களின் சுமார் 1200 குடுபங்களுக்கு, உதவும் விதத்தில் நிவாரண உதவிகளையும் வழங்கினார்.

இதற்காக விஷாலுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ள சென்னை காவல் துறை, விஷால் திரையில் மற்றும் கதாநாயகன் அல்ல, நிஜ வாழ்விலும் சிறந்த கதாநாயகன் தான். இதுபோல் அவர் பணி மேலும் சிறக்க வேண்டும் என்றும் வாழ்த்தியிருக்கிறார்கள்.