கசிந்தது ‘விஜய் 62’ டைட்டில் ரகசியம்! – ரசிகர்கள் செம குஷி
‘கத்தி’, ‘துப்பாக்கி’ படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக இயக்குநர் முருகதாஸ் நடிகர் விஜய் கூட்டணி புதுப்படம் ஒன்றில் இணைந்திருக்கிறது.
இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் வரலட்சுமி சரத்குமார் நடிக்கிறார். இவர்களுடன் அரசியல்வாதிகளாக பழ.கருப்பையா மற்றும் ராதாரவி ஆகியோரும் நடிக்கின்றனர்.
படப்பிடிப்பு 75 சதவீதம் நிறைவடைந்துள்ள நிலையில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது .
இச்செய்தியை படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது. நாளை ஜூன் 22 விஜய்யின் பிறந்த நாள் என்பதால் அவரது பிறந்த நாள் ஸ்பெஷலாக இந்த ஃபர்ட்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடுகிறார்கள்.
இதனால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கும் விஜய் ரசிகர்கள் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை எதிர்பார்த்து ஆவலோடு காத்திருக்கிறார்கள்.
இதற்கிடையே படத்தின் டைட்டில் ‘வேற லெவல்’ என்று வைக்கப்பட்டிருப்பதால் போஸ்டர் ஒன்று சமூக வலைத்தளங்களில் கசிந்திருக்கிறது. இதுதான் உண்மையான டைட்டிலா? அல்லது டைட்டிலுக்கான புரமோஷன் டைட்டிலா? என்று விஜய் ரசிகர்கள் குழம்பிப் போயிருக்கிறார்கள்.கூடவே ‘அதிகாரம்’ என்று டைட்டில் வைக்கப்பட்டிருப்பதாகவும் சொல்கிறார்கள்.
இந்த இரண்டு டைட்டில்களில் படத்தின் டைட்டில் எதுவாக இருந்தாலும் வரப்போகும் டைட்டில் உண்மையிலேயே வேற லெவலில் இருக்கும் என்பது மட்டும் உண்மை!