ஹன்சிகாவை குட்டிக்கரணம் போட வைத்த டைரக்டர்! – அதனால என்னாச்சு தெரியுமா?
நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் ‘மகா’ என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் ஹன்சிகா.
ஜமீல் என்ற புதுமுக இயக்குனர் இயக்குகிறார். அடுத்தடுத்து வெளியான இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில் தற்போது இப்படப்பிடிப்பில் நடித்துக் கொண்டிருந்த போது ஹன்சிகாவுக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது.
படத்தின் சண்டைக்காட்சி ஒன்றில் ஹன்சிகா தரையில் குட்டிக்கரணம் அடிக்க வேண்டும். ஒரு சிறிய கால இடைவெளியில் தவறாக குட்டிக்கரணம் அடித்ததால் சிறியதாக காயம் ஏற்பட்டது.
உடனே சுதாரித்த படக்குழுவினர் ஹன்சிகாவுக்கு முதல் உதவி செய்திருக்கிறார்கள். அத்தோடு அன்றைய படப்பிடிப்பை முடித்துக் கொள்ளலாம் என்று படக்குழு தரப்பில் சொல்லப்பட்டாலும் அதை ஏற்க மறுத்து அன்று அந்தக் காட்சியில் நடித்துக் கொடுத்தாராம்.
ஹன்சிகாவின் 50வது படமாக தயாராகி வரும் இப்படம் இசையமைப்பாளர் ஜிப்ரானுக்கு 25-வது படம்.