கீர்த்தி சுரேஷ் துவங்கிய புதிய நிறுவனம் !
கீர்த்தி சுரேஷ் தனது புது நிறுவனம் குறித்து ரசிகர்களுக்கு சமீபமாக பல யூகங்களை அறிவித்து வந்திருந்தார்.இன்று, நடிகை கீர்த்தி சுரேஷ் தொழில்முனைவோர்களான ஷில்பா ரெட்டி மற்றும் காந்தி தத் ஆகியோருடன் இணைந்து, சுத்தமான மற்றும் இயற்கையான பொருட்களால் தயாரிக்கப்பட்ட சரும பராமரிப்பு தயாரிப்புகளை வழங்கும் பூமித்ரா என்ற நிறுவனத்தை துவங்கியுள்ளதாக அறிவித்துள்ளார். இந்த முயற்சியானது சுற்றுச்சூழல் உணர்வுள்ள நுகர்வோருக்கு ஒரு தனித்துவமான பிராண்டா இருக்கும், மேலும் இயற்கை பொருட்களைப் பயன்படுத்துவதன் பல நன்மைகளைப் ஊக்குவிப்பதாக, இயற்கை சார்ந்த வாழ்க்கைக்கான நுகர்வோரின் மனநிலையில் மாற்றத்தை உருவாக்குவதை நோக்கமாக கொண்டுள்ளது இந்நிறுவனம்.