‘சலார்’ படத்தில் நடிக்கும் ஜெகபதி பாபு!
ஹோம்பாலே பிலிம்ஸ் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாரிக்கும் ‘சலார்’ படத்தில் தெலுங்கின் முன்னணி நடிகர் ஜெகபதி பாபு ஏற்றிருக்கும் ராஜமன்னார் என்ற கதாபாத்திரத்தின் போஸ்டரை அப்பட நிறுவனம் வெளியிட்டிருக்கிறது.’கே ஜி எஃப் சாப்டர் ஒன்’ மற்றும் ‘கே ஜி எஃப் சாப்டர் 2’ ஆகிய படங்களின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் மீண்டும் இணைந்திருக்கும் திரைப்படம் ‘சலார்’. நடிகர் பிரபாஸ், நடிகை சுருதிஹாசன் நடிப்பில் மாஸான ஆக்சன் அட்வென்ச்சர் திரைப்படமாக ‘சலார்’ உருவாகிறது. இன்று ‘சலார்’ படக்குழுவினர், புதிய அப்டேட்டை வெளியிட்டனர். இதில் தெலுங்கின் முன்னணி நடிகரான ஜெகபதிபாபு ‘ராஜமன்னார்’ என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவரின் மிரட்டலான லுக், போஸ்டராக வெளியிடப்பட்டிருக்கிறது.