அம்மா கேரக்டரோ..? அண்ணி கேரக்டரோ..? : அசத்துவாராம் ‘பருத்தி வீரன்’ சுஜாதா!
கமலின் ‘விருமாண்டி’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகத்திற்கு அறிமுகமாகியவர் சுஜாதா. அதன் சினிமா வேண்டாம் என்று இருந்தவரை அமீர் அவர்கள் தேடி பிடித்து பருத்திவீரன் படத்தில் பிரியாமணியின் அம்மாவாக நடிக்க வைத்தார்.
அதை தொடர்ந்து வேல், பிரிவோம் சந்திப்போம், தோட்டா, ரம்மி, மௌனகுரு களவாணி, ரேணிகுண்டா, கோழிகூவுது, வீரம், சுறா, குருவி, பசங்க, கேடி பில்லா கில்லாடி ரங்கா, ஆயுதம்செய்வோம், துள்ளிவிளையாடு, வெயிலோடு விளையாடு, சரவணபொய்கை, கோலிசோடா, சுந்தரபாண்டியன், காக்கிசட்டை, நான்தான் பாலா, வெத்து வேட்டு, அமைதிப்படை – 2, 36 வயதினிலே, சந்தமாமா, ஒண்டிப்புலி போன்ற படங்களில் நடித்துள்ளார்.
டைமன்ட் நெக்லஸ் என்ற மலையாள படத்திலும் நடித்துள்ளார். தெலுங்கு படத்தில் நடிக்க ஆர்வமாக உள்ளார். பாடல் பாடவும் விருப்பம் உள்ளதாக கூறினார்.
தற்போது நான்தான் சிவா, பேரன்பு கொண்ட பெரியோர்களே, திருநாள், போக்கிரிராஜா, காத்தாடிமனசு, 144 தடை உத்தரவு போன்ற படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அம்மா வேடமாக இருந்தாலும் சரி, அண்ணி வேடமாக இருந்தாலும் சரி அந்த கதாபாத்திரமாகவே மாறி விடுவார். அப்படி ஒரு நடிப்பு திறமை.
சமீபத்தில் ஜீவா நடிப்பில் உருவாகி வரும் ‘திருநாள்’ படத்தில் நயன்தாராவுடன் நடிக்கும் போது அழுகிற மாதிரியான காட்சி ஒன்றை படமாக்கியிருக்கிறார்கள். அந்தக் காட்சியில் நடித்த அனைவரும் கிலிசரின் போட்டு அழுதார்கள் ஆனால் சுஜாதா மட்டுமே கிலிசரின் போடாமலே பயங்கரமாக அழுதார் அதை பார்த்த மொத்த யூனிட்டும் கைதட்டி பாரட்டினார்கள்.
இதை பார்த்த நடிகர் ஜீவா நன்றாக நடித்தீர்கள் என்று சொல்லி அவரது அடுத்த படமான ‘போக்கிரி ராஜா’ படத்தில் தனக்கு அம்மாவாக நடிக்க வாய்ப்பு கொடுத்துள்ளார்.