‘இந்த உலகமே உன்னை எதிர்த்தாலும்…’ – அஜித் பட வசனத்தால் சிம்பு ரசிகர்களுக்கு பதிலடி கொடுத்த டைரக்டர்!
‘திரிஷா இல்லனா நயன்தாரா’ படத்தைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ரிலீசான படம் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்.’
சிம்பு ஹீரோவாக நடித்த இப்படத்தை அவருடைய ரசிகர்கள் ஆவலோடு வரவேற்றார்கள். ஆனால் படம் ரிலீசான முதல் நாளே படத்தைப் பார்த்த சிம்பு ரசிகர்கள் ”எங்கள் தலைவர் சிம்புவை வைத்து டைரக்டர் ஆதிக் ரவிச்சந்திரன் எங்களை ஏமாற்றி விட்டார்” என்று கடுமையாக குற்றம் சாட்டினர். அதோடு தலைவா தயவு செஞ்சி நல்ல நல்ல கதைகளை செலெக்ட் பண்ணி நடிங்க என்று சிம்புவுக்கும் அட்வைஸ் செய்தார்கள்.
பிரச்சனை அதோடு விடவில்லை. அடுத்தடுத்து அந்தப்படம் குறித்து வந்த எல்லா எதிர்மறை விமர்சனங்களும் டைரக்டர் ஆதிக் ரவிச்சந்திரனை மட்டுமே குறிவைத்து தாக்கியதாக இருந்தது.
இப்படி தன் மீது வந்த எந்த விமர்சனத்துக்கும் ஆதிக் ரவிச்சந்திரன் அப்போது எந்தப் பதிலும் கொடுக்கவில்லை. மாறாக தனக்கு நெருக்கமான சிலரிடம் சிம்புவின் அட்ராசிட்டிகளைப் பற்றி சொல்லி வருத்தப்பட்டாராம்.
அதன் பின் பல மாதங்களாக அமைதியாக இருந்தவருக்கு புதுப்பட வாய்ப்பு கிடைப்பதென்பது பெரும் சிக்கலாகி விட்டது. இதனால் நொந்து போனவர் சில தினங்களுக்கு முன்பு ‘உலகமே உன்னை எதிர்த்தாலும் நீயா ஒத்துக்கிற வரை, உன்னை யாராலும் ஜெயிக்க முடியாது’ என்ற விவேகம் பட வசனத்தை தன்னை விமர்சித்தவர்களுக்கு பதிலடியாக ட்விட்டரில் வெளியிட்டிருக்கிறார். அதோடு இதிலிருந்து நான் மீண்டும் வருவேன் என்றும் தெரிவித்திருக்கிறார்
இது யாருக்கான பதிலாக இருக்கும் என்று அவர் அதில் குறிப்பிடவில்லை என்றாலும் சிம்புவுக்கும், தன்னை விமர்சித்த அவரது ரசிகர்களுக்குமான பதில் தான் அது என்கிறார்கள் விபரம் தெரிந்தவர்கள்.