ஹிட் செண்டிமெண்ட் : விஜய் படங்களை குறி வைக்கும் பாலிவுட் ஹீரோ!

Get real time updates directly on you device, subscribe now.

vijay1

ரு ரீமேக் படம் ஹிட்டாகி விட்டால் செண்டிமெண்ட்டாக அதே ரூட்டில் பயணப்படுவது ஹீரோக்களுக்கு பாதுகாப்பாகி விடுகிறது.

ஏற்கனவே விஜய் தமிழில் நடித்த ‘துப்பாக்கி’யின் ஹிந்தி ரீமேக்கில் நடித்தார் அக்‌ஷய் குமார். இது ‘ஹாலிடே’ என்ற பெயரில் ரிலீசாகி சூப்பர் ஹிட்டானது.

அடுத்து ‘கத்தி’யின் ஹிந்தி ரீமேக்கிலும் நடிக்க சம்மதம் சொல்லியிருக்கிறார்.

Related Posts
1 of 12

இப்போது ‘கத்தி’யைத் தொடர்ந்து லேட்டஸ்ட்டாக தமிழில் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘தெறி’ படத்தின் ஹிந்தி ரீமேக்கிலும் நடிக்கப் போகிறாராம் அக்‌ஷய் குமார்.

6 நாட்களில் 100 கோடியை அள்ளிய தெறியின் வசூல் நிலவரம் அக்‌ஷய் குமாரின் கண்ணை உறுத்த எப்படியாவது அதன் ஹிந்தி ரீமேக்கில் தான் நடித்து விட வேண்டும் என்கிற முடிவுக்கு வந்திருக்கிறார்.

தற்போது ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘2.ஓ’ படத்தில் வில்லனாக நடித்து வரும் அக்‌ஷய் அது முடியவும் ‘கத்தி’, ‘தெறி’ என அடுத்தடுத்த ரீமேக் படங்களில் நடிப்பார் எனத் தெரிகிறது.