‘பேட்ட’ – செம மாஸா ரஜினி பட டைட்டில்!

Get real time updates directly on you device, subscribe now.

‘காலா’ படத்தைத் தொடர்ந்து கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் புதுப்படம் ஒன்றில் நடித்துக் கொண்டிருக்கிறார் ரஜினி.

இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்தப் படம் ரஜினியின் 165 வது படமாகும். அதனால் இப்படத்தை ரஜினி ரசிகர்கள் தலைவர் 165 என்று அழைத்து வந்தனர்.

இப்படத்தில் ரஜினிகாந்துக்கு வில்லனாக கார்த்திக் சுப்புராஜின் நண்பரும் நடிகருமான விஜய் சேதுபதி, பாலிவுட் நடிகர் நவாசுதீன், கார்த்திக் சுப்ராஜின் மற்றொரு நண்பரான பாபி சிம்ஹா ஆகியோர் நடித்து வருகிறார்கள். கதாநாயகிகளாக சிம்ரன் மற்றும் திருஷா ஆகியோர் நடித்து வருகிறார்கள்.

Related Posts
1 of 63

படத்தின் படப்பிடிப்பு டார்ஜிலிங், இமையமலை உள்ளிட்ட பகுதிகளில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், நேற்று இந்தப் படத்துக்கு பேட்ட என்று டைட்டில் வைத்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

மேலும் வெளியான படத்தின் மோஷன் போஸ்டரில் ரஜினியின் இளமையான தோற்றம் மற்றும் தர லோக்கலான படத்தின் டைட்டில் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.

படத்தில் ரஜினி ஒரு மாணவர் விடுதியில் பாதுகாவலராக நடிக்கிறார் என்றும், கதைக்களம் ஊட்டி மற்றும் மதுரையில் நடைபெறுவதாக அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.