AGS தயாரிக்கும் புதியபடம்!

Get real time updates directly on you device, subscribe now.

 

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தனது 29வது திரைப்படத்தை பூஜையுடன் இன்று தொடங்கியது.

கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் உருவாக உள்ள இந்த படத்தை எம்.எஸ். ஆனந்தன் இயக்குகிறார். விஷால் நடித்த ‘சக்ரா’ படத்தை இதற்கு முன்னர் இவர் இயக்கியது குறிப்பிடத்தக்கது.

ஜெய், பிரியங்கா மோகன், யோகி பாபு முதன்மை வேடங்களில் நடிக்கும் ‘ஏஜிஎஸ் 29’ என்று அழைக்கப்படும் இந்த படத்தில் ராஜீவ் மேனன், நாசர், ஜி.எம். சுந்தர், ரமேஷ் திலக் மற்றும் அருள் தாஸ் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

Related Posts
1 of 6

திரைப்படம் குறித்த தகவல்களை பகிர்ந்த இயக்குநர் எம்.எஸ். ஆனந்தன், “தொடக்கம் முதல் இறுதி வரை பார்வையாளர்களை இருக்கையின் நுனியிலேயே அமர வைக்கும் விறுவிறுப்பான அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக இது அமையும். அதே சமயம், நகைச்சுவை போன்ற இதர சுவாரஸ்யமான அம்சங்களும் சரியான அளவில் இடம்பெறும். ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் இப்படத்தை இயக்குவது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது,” என்று தெரிவித்தார்.

இப்படத்தின் படப்பிடிப்பு ஊட்டி, சென்னை உள்ளிட்ட இடங்களில் நடைபெறும்.