‘பிங்க்’ தமிழ் ரீமேக்கில் அஜித் – உண்மையா?
தொடர்ந்து நான்காவது முறையாக இயக்குனர் சிவாவுடன் ‘விசுவாசம்’ படத்தில் கூட்டணி அமைத்திருக்கிறார் அஜித்.
அஜித்துடன் நயன்தாரா, தம்பி ராமையா, ரோபோ ஷங்கர் உள்ளிட்ட பலரும் நடித்து வரும் இப்படத்தை சத்யஜோதி நிறுவனம் அதிக பொருட்செலவில் தயாரித்து வருகிறது.
விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைய உள்ள நிலையில், அஜித்தின் அடுத்த படத்தை அஜித்தின் அடுத்த படத்தை ”தீரன் அதிகாரம் ஒன்று” பட இயக்குநர் வினோத் தான் இயக்கப் போகிறார் என்று தகவல் வெளியானது.
ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்க உள்ள இந்தப்படம் ஹிந்தியில் ரிலீசாகி மாபெரும் வெற்றி பெற்ற படமாகத் தான் இருக்கும் என்பது உறுதியாகி விட்டது.
அதன்படி ஹிந்தியில் கடந்த 2016 – ம் ஆண்டு அமிதாப் பச்சன், டாப்ஸி நடிப்பில் ரிலீசான ‘பிங்க்’ படம் தான் தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது என்றும், அமிதாப்பச்சன் கதாபாத்திரத்தில் தமிழில் அஜித் நடிக்க உள்ளார் என்றும் செய்தி வெளியாகியிருக்கிறது.
ஆனால் அப்படி வெளியான செய்திகளில் உண்மை இல்லை என்று தற்போது புதிய தகவல் வெளியாகியிருக்கிறது.
ஏனென்றால் ‘பிங்க்’ ஹிந்திப் படத்தில் அமிதாப் பச்சனின் கேரக்டர் பவர்புல்லான வக்கீல் கேரக்டர் என்றாலும் படத்தின் கதை மூன்று பெண்களை மட்டுமே சுற்றி நகரும்படி அமைக்கப்பட்ட கதை. அதைத் தாண்டி அமிதாப் பச்சன் கேரக்டருக்கு பெரிய அளவில் படத்தில் முக்கியத்துவம் இல்லை.
இப்படிப்பட்ட கேரக்டரில் அஜித் நடிக்க சம்மதிக்க மாட்டார் என்றே அவர் சார்ந்த வட்டாரங்களில் சொல்லப்படுகிறது. மேலும் இதில் அஜித் நடித்தால் அவரது ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்களா? என்பதும் சந்தேகமே.
இதனால் ‘பிங்க்’ ஹிந்தி ரீமேக்கில் அஜித் நடிக்கப் போகிறார் என்று வரும் செய்திகளில் உண்மையில்லை என்பதே தற்போதைய செய்தி.
இதற்கிடையே ரீமேக் படத்தை இயக்க விரும்பாத இயக்குனர் வினோத் இந்தப் படத்திலிருந்து வெளியேறி விட்டாராம்.