ஓஹோ இதுதான் ‘தங்க மகன்’ படத்தோட கதையா..?

ஒரு படத்தின் கதை எப்படியிருக்கும் என்பதை அப்படத்தின் இயக்குநரை விட ரசிகர்கள் கணிப்பது சில நேரங்களில் சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது.
சமீபகாலமாக பல முன்னணி நடிகர் நடித்த படங்களின் கதை பற்றிய தகவல்கள் அவ்வப்போது லீக்காகி சூடு கிளப்புகின்றன.
அஜித் நடித்த ‘வேதாளம்’ படத்தின் கதை கூட ரிலீசுக்கு முன்பாக இணையதளங்களில் வைரலாகப் பரவியது.
இணையத்தில் வெளியான கதைக்கும் ரிலீசானவுடன் ‘வேதாளம்’ படத்தில் இருந்த கதைக்கும் பெரிய வித்தியாசமில்லை. அந்தளவுக்கு சரியாகக் கணித்திருந்தார்கள்.
சில நேரங்களில் போஸ்டர்களை வைத்தே கதையை கணித்து விடுகிறார்களோ? என்கிற சந்தேகம் எழுவதையும் தவிர்க்க முடியவில்லை.
அந்த வரிசையில் இதோ இதுதான் தனுஷ் நடித்துள்ள ‘தங்க மகன்’ படத்தின் கதை என்று ஒரு தகவல் லீக்காகியிருக்கிறது. வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக சமந்தா மற்றும் எமி ஜாக்சன் நடித்துள்ளனர்.
இது நடுத்தர குடும்பத்தில் வாலும் இளைஞன் ஒருவனின் கதையாம். படத்தில் தனுஷின் அப்பாவாக இயக்குநர் கே.எஸ்.ரவிகுமாரும், அம்மாவாக ராதிகா சரத்குமாரும் நடித்திருக்கிறார்கள்.
தனுஷ் தன் திருமணத்திற்கு முன்பு பணக்காரப் பெண்ணான எமி ஜாக்சன் உடன் லவ், ரொமான்ஸ் என என்று பொறுப்பில்லாமல் திரிந்து கொண்டிருப்பார்.
பிறகு அப்பா, அம்மா சந்தோஷத்திற்காக சமந்தாவை திருமணம் செய்து கொண்டு வாழ்கிறார். எமியை காதலித்து விட்டு சமந்தாவை திருமணம் செய்யும் தனுஷுக்கு அதன்பிறகு எப்படி பொறுப்பு வருகிறது என்பதே கதையாம். இப்படி ஒரு கதை தங்க மகனைப் பற்றி பரவி வருகிறது.
படித்துப் பார்த்தால் நன்றாகத்தான் இருக்கிறது.
ஆனால் இதுதான் ‘தங்க மகனி’ன் ஸ்பெஷல் என்பதை தனுஷ் தான் உறுதி செய்ய வேண்டும்.