கட்டிடம் கட்ட பணம் தருவதாக சொன்னாரா அஜித்? : அம்பலத்துக்கு வந்த அஜித் ரசிகர்களின் அண்டப்புழுகு

Get real time updates directly on you device, subscribe now.

ajithkumar1

”நடிகர் சங்கம் கட்டிடம் கட்டுவதற்கான பணத்தை மக்களிடம் வசூலிக்க வேண்டாம். நமது சொந்தப் பணத்தையே போட்டு கட்டுவோம். அதற்கான முதல் நிதியை நானே தருகிறேன்” என்று அஜித் நடிகர் சங்க நிர்வாகிகளிடம் சொன்னதோடு மட்டுமில்லாமல், பல லட்சம் ரூபாய் பணத்துக்கான செக்கையும் கொடுத்ததாக நட்சத்திர கிரிக்கெட் நடப்பதற்கு முன்பு சமூக வலைத் தளங்களில் ‘அள்ளி விட்டார்கள்’ அஜித் ரசிகர்கள்.

ஆனால் அப்படி வந்த செய்திகள் எல்லாமே ‘அண்டப்புழுகு’ என்பது இப்போது அம்பலத்துக்கு வந்திருக்கிறது.

இது குறித்து நடிகர் சங்க நிர்வாகிகளில் ஒருவரான பொன்வண்ணனிடம் கேட்டபோது…

”இப்படிப்பட்ட செய்திகள் சமூக வலைத்தளங்களில் மட்டுமே வந்ததே தவிர, தனிப்பட்ட முறையில் அஜித் சார் அந்த மாதிரியான தகவல் எதையும் எங்களிடம் சொல்லவில்லை.

Related Posts
1 of 148

இன்னொன்று எங்களுக்கு தேவை பணம். அந்தப் பணம் ஒரு உறுப்பினருடைய பங்களிப்போட இருந்தா எங்களுக்கு ரொம்ப சந்தோஷம். இன்னைக்கு 28 கோடி ரூபாய் தேவைப்படுதுன்னு சொல்றோம். அதுல 8 கோடி ரூபாயை வெறும் 60 நாட்களில் எங்கள் அறிவுக்கு எட்டியபடி திட்டமிட்டு வசூல் செய்திருக்கிறோம். ஏற்கனவே ஒரு நடன நிகழ்ச்சி மூலமாகத்தான் நடிகர் சங்கத்துக்கு நிதி திரட்டப்பட்டிருக்கிறது.

ஆனால் எங்களுடைய சக நடிகர், நடிகைகளை ஒரு கொச்சையான பாடலுக்கோ? ஆடைக்குறைப்பு செய்து ஆட விட்டோ? பணம் சம்பாதிக்க வேண்டாம் என்று நினைத்தோம். அப்போது தான் இப்போது இருக்கக்கூடிய விஷால், ரமணா ஆகியோருக்கு சிசிஎல் கிரிக்கெட்டைப் பற்றி ஒரு மிகப்பெரிய அனுபவம் இருந்தது. அந்த அனுபவத்தை வைத்து தான் ஒரு கிரிக்கெட் ட்ரெய்லரை தயார் செய்து கொண்டு வந்து இப்படி செய்தால் சரியாக இருக்கும் என்று சொன்னார் ரமணா. அதன்பிறகு தான் இந்த நிகழ்ச்சி நடந்தது.

இப்படி பல போராட்டத்துக்குப் பிறகு தான் இந்த பணத்தை தயார் செய்திருக்கிறோம். இன்னும் எங்களுக்கு பணம் தேவைப்படுகிறது. அதை எல்லோரிடமும் கேட்போம்” என்றார்.

அஜித் நடிகர் சங்கம் கட்டுவதற்கு பணம் தருவதாக சொல்லவே இல்லை என்கிறது நடிகர் சங்கம்.

இதுக்கு என்ன பதில் சொல்லப்போறீங்க அஜித் ஃபேன்ஸ்?