இயக்குநர் அவதாரமெடுத்த நடிகர் விஜய் ஆண்டனி


பேரார்வம், பயிற்சி மற்றும் அர்ப்பணிப்பு ஒரு தனிநபரை, எந்தவொரு களத்திலும் மிகசிறந்தவராக மாற்றிவிடுகிறது. திரைத்துறையில் இதற்கு எடுத்துகாட்டாக பல நிகழ்வுகள் உள்ளன, விடாமுயற்சி, பொறுமை மற்றும் ஆர்வம் ஆகியவை இத்துறையில் பல தனிநபர்களுக்கு, பெரும் வெற்றியை பெற்றுத் தந்துள்ளது. இசை இயக்குனராக, பல அதிரடியான வெற்றிபெற்ற ஆல்பங்களின் மூலம், பிரமிக்க வைக்கும் சாதனை படைத்தவர். ஒரு நடிகர் மற்றும் தயாரிப்பாளராக பிளாக்பஸ்டர் வெற்றிகளை தந்தவர். இதுறையில் பல பரிணாமங்களில் அவரது திறமையை நிரூபித்த பிறகு, தற்போது கோலிவுட்டில் இயக்குநராக அவதாரம் எடுத்துள்ளார் விஜய் ஆண்டனி. இன்று (ஜூலை 24, 2021) தனது பிறந்தநாளில் இந்த சிறப்பு நிகழ்வைக் குறிக்கும் வகையில், விஜய் ஆண்டனி தனது Vijay Antony Film Corporation நிறுவனம் மூலம், தயாரிக்கப்படும் “பிச்சைக்கரன் 2” திரைப்படத்தை இயக்குவது குறித்த, அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.