தமிழுக்கு முதலிடம்! : தமன்னாவை பார்த்தாவது திருந்துங்க நயன்தாரா!!

Get real time updates directly on you device, subscribe now.

tamanna1

தெலுங்கை விட தமிழில் அதிக சம்பளம் வாங்கும் முன்னணி நடிகைகள் ஆந்திராவில் நாலு நிருபர்களை சந்திக்கிற கூட்டமென்றாலும் மிஸ் பண்ணாமல் ஆஜராகிவிடுகிறார்கள்.

ஆனால் தமிழில் ஒரு பிரம்மாண்டமான ஆடியோ பங்ஷனாக இருந்தாலும் பிளைட்டைப் பிடித்து விழாவுக்கு வருவதே இல்லை. காஜல் அகர்வால், நயன்தாரா போன்ற சில முன்னணி நடிகைகள் இப்படி தமிழ்ப்பட விழாக்களை புறக்கணிக்கும் போக்கு தொடர்ந்து கொண்டிருக்கிறது.

அதிலும் நயன் தாராவெல்லாம் விட்டால் செஞ்சுரியே அடித்து விடுவார்கள் போலிருக்கிறது. இதே நயன் தாரா தெலுங்கு பட விழா என்றால் மறக்காமல் ஆஜராகி விடுகிறார்.

இப்படி தாங்கள் நடித்த படங்களின் புரமோஷன்களுக்கே வராமல் டிமிக்கி கொடுக்கும் நடிகைகளுக்கு மத்தியில் சமீபத்தில் ஒரு ஆச்சரிய நிகழ்வை நடத்தினார் தமன்னா.

பாகுபலி ஹிட்டுக்குப் பிறகு தமன்னாவுக்கு தமிழில் தோழா படம் ரிலீசாகப் போகிறது. கார்த்தி, நாகர்ஜூனா மற்றும் பலர் நடித்திருக்கும் இப்படத்தின் ஆடியோ பங்ஷன் சமீபத்தில் சென்னையில் நடந்தது. விழாவுக்கு வழக்கம் போல தமன்னா வர மாட்டார் என்றே எல்லோரும் நம்பிக்கொண்டிருக்க, யாரும் எதிர்பாராத விதமாக கவர்ச்சியான உடையில் மேடையில் தோன்றி அசத்தினார்.

Related Posts
1 of 3

தமன்னா ஒரு தேவதை என்றெல்லாம் திரையுலக பிரபலங்கள் அவரை வாழ்த்தினார்கள்.

ஆனால் அதே படத்தின் தெலுங்கு பதிப்பான ஊபிரியின் ஆடியோ பங்ஷன் ஹைதராபாத்தில் நடைபெற்ற போது நாகார்ஜூனா, கார்த்தியும் பங்கேற்ற போதும் தமன்னா மட்டும் விழாவை புறக்கணித்து விட்டார்.

இதனால் சந்தேகம் கிளம்ப அன்றைய தினம் விஜய் சேதுபதியுடன் நடிக்கும் தர்மதுரை படப்பிடிப்பு இருந்ததால் தான் விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை என்று விளக்கம் கொடுத்து சமாளித்திருக்கிறார்.

எப்படி பார்த்தாலும் அவர் தமிழுக்கு முன்னுரிமை கொடுத்திருக்கிறார் என்பது மட்டும் உண்மை.

தமிழுக்கு தமன்னா கொடுக்கும் முக்கியத்துவத்தைப் பார்த்தாவது நயன்தாராக்கள் திருந்தினால் சரி!