அமரன்- விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

SK கரியரில் ஒரு சிறந்த படமாக அமைந்துள்ளது அமரன்

ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை கொண்ட அமரனின் கதை, காதலும் போரும் சார்ந்தது. கல்லூரியில் சாய் பல்லவியை காதலிக்கும் சிவகார்த்திகேயன், ராணுவத்தில் சேர வேண்டும் என்பதை லட்சியமாகக் கொண்டவர். சாய் பல்லவி குடும்பத்திற்கு ராணுவம் என்றால் அலர்ஜி. சிவகார்த்திகேயன் சாய் பல்லவி குடும்பத்தைச் சமாதானப்படுத்தி சாய் பல்லவியை கரம் பிடிக்கிறார். அதன்பின் போரும் வாழ்வுமாக தொடரும் சிவகார்த்திகேயன் பயணத்தின் முடிவு என்ன? என்பதே படத்தின் கதை

முரட்டு உடல், மிரட்டும் விழி என, சிவகார்த்திகேயன் ஒரு முழுமையான மாஸ் ஹீரோவாக உருவாகி விட்டார். அம்மாவைச் சமாளிக்கும் காட்சியாக இருந்தாலும், மனைவியோடு உருகும் காட்சியாக இருந்தாலும் பின்னிவிடுகிறார். Congrats SK.
இந்த வருடத்திற்கான தேசியவிருதை சாய் பல்லவிக்கு எடுத்து வைத்துவிடலாம். அத்தகைய நடிப்பைத் தந்துள்ளார் சாய் பல்லவி. படத்தில் நம்மை கண்கலங்க வைக்க அவர் எந்த முயற்சியும் செய்யவில்லை. அவரது இயல்பான நடிப்பு நம்மை கண்ணீருக்குள் தள்ளிவிடுகிறது

இசை அமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் படத்தின் உயிருக்குள் ஊடுருவியுள்ளார். இசையால் அரங்கமும்,அகமும் அதிர்கிறது. நல்ல ப்ரேமிங், லென்த்தியான அதே சமயம் ஹெல்த்தியான ஷாட்ஸ் எல்லாம் ஒளிப்பதிவாளரை பாராட்ட வைக்கிறது.

ஒரு படத்திற்குள் சென்று வந்தோம் என்ற உணர்வை விட,ஒரு வாழ்வுக்குள் சென்று வந்தோம் என்ற உணர்வைத் தந்துள்ளது படம். எழுத்திலும், எடுத்ததிலும், எடிட்டிங்கிலும் ஆகத்தெளிவோடு வேலை செய்துள்ளனர்..அந்த ரிசல்ட் படம் முடிந்ததும் ரசிகனின் முகத்தில் தெரிகிறது. Sure ah டிக்ளர் பண்ணிடலாம்..இந்த தீபாவளி வின்னர் அமரன் தான்
3.75/5