ஆரா சினிமாஸ் ரிலீஸ் செய்யும் ‘மசாலா படம்’

Get real time updates directly on you device, subscribe now.

bobby

மீபத்தில் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிய டேர்மினேட்டர், மிசன் இம்பாசிபல் ஆகிய ஹாலிவுட் படங்களை ரிலீஸ் செய்த ஆரா சினிமாஸ் தமிழ்ப்படங்களில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளனர். அந்த வகையில் இந்த மாதம் ‘உனக்கென்ன வேணும் சொல்லு’ படத்தை ரிலீஸ் செய்ய உள்ளனர்.

இதைத் தொடர்ந்து ஆல் இன் பிக்சர்ஸ் என்னும் புதியபட நிறுவனம் தயாரிக்க, பிரபல ஒளிபதிவாளர் லக்ஷ்மண் இயக்கத்தில், பாபி சிம்ஹா, மிர்ச்சி சிவா நடித்திருக்கும் ‘மசாலா படம்’ என்னும் படத்தின் விநியோக உரிமையை பெற்று ரிலீஸ் செய்ய உள்ளனர்.

‘இன்று வரும் படங்கள் ஏறத்தாழ ஒன்றை ஒன்று மிஞ்சும் வகையில் தரமாக வந்துக் கொண்டுதான் இருக்கிறது. என்னதான் உணவு பிரமாதமாக சமைக்கப்பட்டாலும் பரிமாறப்படும் போது தான் அந்த உணவுக்கான மரியாதையே கூடுகிறது.

எங்களது நிறுவனம் நல்ல தரமான் படைப்புகளை தேர்ந்தெடுத்து, அதை உரிய வகையில் மக்களிடம் சென்று சேர்க்கும் பணியை நிறுவனம் செய்யும். இப்பொழுது எங்களது நிறுவனத்தின் சார்பில் அடுத்து வெளியிடப்பட உள்ள படம் ‘மசாலா படம்’. பெரிதும் எதிர்பார்க்கப்படும் படம். சமூக வலைத்தளங்களில் சினிமாவை விமர்சிப்பவர்களுக்கும், அப்படி செய்யக்கூடாது என சொல்லும் திரை உலகினருக்கும் இடையே நடக்கும் வாதத்தையும், பிரதிவாதத்தையும் படம் பிடித்துக் காட்டும் கதை தான் ‘மசாலா படம்’.

இயக்குனர் லக்ஷ்மண் மிகவும் சுவரஸ்யமாக இந்தக் கதையை கையாண்டு இருக்கிறார். இந்தக் கதை நிச்சயமாக யாரும் சொல்லாத கதைதான், கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் கூட யாருக்கும் இப்படி ஒரு கதை தோன்றி இருக்காது. அந்த வகையில் இவ்வளவு வித்தியாசமான கதையை தேர்ந்தெடுத்து தயாரித்த தயாரிப்பாளர் விஜய் ராகவேந்தருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் என்றார் ஆரா சினிமாஸ் நிறுவனர் மகேஷ்.