தமிழ்சினிமாவில் ஒரு உலகசினிமா முயற்சி
திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு விடாப்பிடி குணம் கொண்ட பாட்டி கீதா கைலாசம். அவருக்கு ஜாக்கெட் அணியும் பழக்கம் கிடையாது. கஷ்டப்பட்டு தன் பையன்களை வளர்க்கிறார். ஒரு மகன் சரண் மருத்துவத்தில் வேலை கிடைத்து நல்ல நிலைக்கு உயர்கிறார். முல்லையரசியோடு அவர் காதலும் கொள்கிறார். அந்தக் காதலியின் வீட்டார் முன்பு தன் அம்மா கீதா கைலாசம் ஜாக்கெட் அணிந்தால் நன்றாக இருக்கும் என நினைக்கிறார். அதற்கான முயற்சியை தன் அண்ணன் மனைவி மூலமாக எடுக்கிறார். முடிவில் கீதா கைலாசம் ஜாக்கெட் அணிந்தாரா.. இல்லையா? என்பதே கதை
நடிப்பு அரக்கியாக தன்னை வெளிப்படுத்தியுள்ளார் கீதா கைலாசம். இந்த வருடம் சில விருதுகளை அவருக்காக எடுத்து வைக்கலாம்..வடசென்னை சரண் பிரமாதமான நடிப்பைக் கொடுத்துள்ளார். பரணிக்கு இந்தப்படம் நல்லதொரு மைல்கல். முல்லையரசி உள்பட படத்தில் எல்லாக் கேரக்டரும் எதார்த்தம் மீறாமல் நடித்துள்ளனர்
அஞ்சோய் சாமுவேலின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரும்பலம். நெல்லையின் பசுமை வெறுமை அனைத்தையும் சிறப்பாக வெளிக்காட்டியுள்ளார். இசையமைப்பாளர் முகமது முக்பூல் மன்சூர் தரமான இசையை வழங்கியுள்ளார்.
விபின் ராதாகிருஷ்ணன் எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய கோடித்துணி என்ற சிறுகதையிலிருந்து இந்தப்படத்திற்கு திரைக்கதை எழுதியுள்ளார். எல்லாக் காட்சிகளை இன் ட்ரெஸ்டிங்காக நகர்த்தியதில் அவரது சாமர்த்தியம் தெரிகிறது. சிற்சில குறைகள் படத்தில் எட்டிப்பார்த்தாலும் ஒட்டுமொத்தமாக ஒரு நல்ல Feel-ஐ கொடுக்கிறது படம்
3/5