எளிய குடும்பங்களின் வாழ்வை சீர்குலைக்கும் மதுப்பிரியர்களின் கதை இது
கதையின் நாயகன் குரு சோமசுந்தரம் மகாபெரிய குடிகாரர். கட்டிட வேலைக்குச் செல்லும் அவர் குடிக்காமல் ஒரு பொழுதையும் கடப்பதில்லை. அப்பேர்ப்பட்ட குடிநோயாளியோடு, இரு குழந்தைகளை வைத்துக்கொண்டு குடும்பம் நடத்துகிறார் நாயகி சஞ்சனா. தன் சங்கடங்கள் தீர்வதற்காக கணவனைத் திருத்த பெரும் முயற்சி எடுக்கிறார். அந்த முயற்சிகளின் விளைவு என்ன? என்பதே படத்தின் கதை
படத்தின் துவக்க்மே குடியால் குருசோமசுந்தரம் செய்யும் அட்ராசிட்டி தான். அந்த முதல் காட்சியிலிருந்தே குடிநோயாளியாக நமக்குத் தோன்ற ஆரம்பித்துவிடுகிறார் குரு சோமசுந்தரம். நிறைய காட்சிகளில் அப்ளாஸ் வாங்கும் அவர், சில காட்சிகளில் ஓவர்டோஸுக்கும் சென்றுவிடுகிறார். கதையின் நாயகி சஞ்சனா வஞ்சனை இல்லாமல் நடித்துத் தள்ளியுள்ளார். தெருவில் அமர்ந்து புலம்பும் அந்த ஒற்றைக் காட்சி போதும் அவரின் நடிப்பைச் சொல்ல. ஜான் விஜய் வெகுநாடகளுக்குப் பிறகு ஒரு அழுத்தமான முத்திரையைப் பதித்துள்ளார். ஏனைய எல்லாக் கேரக்டர்களும் கச்சிதமாக நடித்துள்ளனர்
இந்தப்படத்திற்கு தேவையான பின்னணி இசையை சிறப்பாக தந்துள்ளார் இசைஞர். பாடல்களும் பரவாயில்லை. ஒளிப்பதிவில் பட்ஜெட் தெரியவில்லை. சப்ஜெக்ட் தான் தெரிகிறது. வெல்டன்!
“மது நாட்டுக்கும் வீட்டுக்கும் உயிருக்கும் கேடு” என்ற வாசகத்தை ஒரு சினிமாவாக மாற்றி, அதை இன்ட்ரெஸ்டிங்-ஆகவும் கொடுத்திருப்பது வேறலெவல். முதல்பாதியில் மிக இயல்பாக நமக்குள் ஏறும் கதை, இரண்டாம் பாதியில் இறங்குவது ஒரு மைனஸ். இன்றையச் சூழலில் அவசியத்தேவையான சினிமாவைத் தந்துள்ள இயக்குநருக்குப் பாராட்டுக்கள்
3.5/5