தமிழ்நாட்டுல கல்லா கட்டு ; ஆந்திராவுல வீட்டை கட்டு : உஷார் பார்ட்டியான அஞ்சலி

Get real time updates directly on you device, subscribe now.

anjali1

குடும்பப் பிரச்சனையிலிருந்து மெல்ல மெல்ல மீண்டு வந்திருக்கும் அஞ்சலிக்கு தேடிப்போன ஆந்திராவை விட நம்பி வந்த தமிழ்சினிமா மீண்டும் ரீ-எண்ட்ரி போட்டுக் கொடுத்து விட்டது.

கைவசம் அரை டஜன் படங்கள் வரை தமிழில் கமிட் செய்து வைத்திருப்பவர் தேடி வருகிற தெலுங்கு படங்களையும் விடுவதில்லை. போதாக்குறைக்கு சமீபத்தில் தெலுங்கில் ரிலீசான ‘டிக்டேட்டர்’ திரைப்படமும் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்திருப்பதால் சந்தோஷத்தில் இருப்பவர் இனி தெலுங்கிலும் தமிழைப்போல கணிசமான எண்ணிக்கையில் வாய்ப்புகள் வரும் என்று ஆவலோடு காத்துக்கொண்டிருக்கிறார்.

Related Posts
1 of 6

என்னதான் தெலுங்கை விட தமிழில் வாய்ப்புகள் அதிகம் என்றாலும் இனிமேலும் சென்னையில் இருந்தால் யார் மூலமாகவாவது பிரச்சனை வந்துவிடக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார். அந்த ஒரு காரணத்துக்காகவே தனது வீட்டை ஹைதாராபாத்திலேயே நிரந்தமாக மாற்றி விட்டாராம்.

ஏதாவது படப்பிடிப்பு என்றால் மட்டுமே சென்னையில் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்கி நடித்து விட்டுப்போவது. இல்லையென்றால் ஆந்திராவில் உள்ள சொந்த வீட்டிலேயே இருப்பது என்கிற முடிவுக்கு வந்திருக்கிறார்.

ஆமாம்… ஆமாம்… சேப்டி ரொம்ப ரொம்ப முக்கியம்!