‘அனிமல் லவ்வர்’ பிரணிதா : நீயும்மாம்மா..?

Get real time updates directly on you device, subscribe now.

pranitha

”நோகாமல் நோம்பு கூம்பிடுகிற” சமாச்சாரம் வேலை செய்வதில் மட்டுமல்ல, அன்பு காட்டுவதில் கூட பணக்கார வர்க்கத்தினரிடம் இருக்கிறது.

சாலையைக் கடந்து போகும் யாராவது அடிபட்டுக் கிடந்தால் கார் கண்ணாடியை இறக்கிக் கூட பார்க்கத் தயங்கும் இந்த வகை ‘நல்லவர்கள்’ பாசம் காட்டும் இடம் எதுவென்றால் அது விலங்குகள் மீதுதான்.

மனிதர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் ஓடி வர மறுக்கும் இவர்களின் மனசு விலங்குகளுக்கு ஒன்றென்றால் உச்சநீதிமன்றம் வரை கூட போய் கேஸ் போடுவார்கள்.

அதிலும் கூட நாய்க்குட்டிகள் மீது இவர்களுடைய அதிகப்பட்ச பாசம் இருக்கும். நாய்க்குட்டிகளை டஜன் கணக்கில் வளர்த்து தங்களை விலங்கின ஆர்வலராக காட்டிக்கொள்ளும் இவர்கள் மறந்தும் கூட மற்ற உயிரினங்கள் மீது பாசம் காட்டுவதில்லை.

சரி விஷயத்துக்கு வருவோம்! இப்படிப்பட்ட அனிமல் லவ்வர் லிஸ்ட்டில் தான் சேர்ந்திருக்கிறாராம் நடிகை பிரணீதா. சகுனி படத்தில் கார்த்தி ஜோடியாகவும், மாஸ் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தாரே? அவரே தான்.

இவர் தெலுங்குப்படம் ஒன்றில் ஆந்திராவில் இருந்த போது அங்கு அவர் கண்ணில் பட்ட ஒரு நாய்க்குட்டியை எடுத்து வளர்த்து வருகிறாராம்.

ஏன் இந்த திடீர் பாசம் என்றால் “என் வீட்டில் ஜெர்மன் ஷெபர்ட் நாய் ஒன்று இருந்தது. அதன் மீது அன்பு காட்டத் தொடங்கியதும் பின்னர் எல்லா நாய்கள் மீதும் அன்பு ஏற்பட்டு விட்டது. அப்படிப்பட்ட அந்த நாய் கடந்த ஆண்டு இறந்து விட்டது. அதைப்போலவே நான் பார்த்த நாய் இருந்ததால் அதன் மீது பாசம் வந்து விட்டது என்கிறார்.

ஷூட்டிங்கைத் தவிர மத்த இடத்துல எல்லாம் கரெக்ட்டா நடிக்கிறீங்கம்மா…!