கல்யாணம் பண்ணிக்கம்மா..! : அனுஷ்காவை அலற விடும் ஹீரோக்கள்

அனுஷ்காவின் உசரத்தையும், அவரது அழகான உடற்கட்டையும் எந்தளவுக்கு பிளஸ் ஆக சொல்லி வந்தார்களோ? இப்போது அதே அளவுக்கு அதை மைனஸ் ஆக பார்க்க ஆரம்பித்து விட்டது திரையுலகம்.
களையான முகவெட்டும், கவர்ச்சியும் காட்ட தயங்காததால் அவரது உயரத்தை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாமல் முன்னணி ஹீரோக்கள் பலரும் அவருடன் ஜோடி சேர்ந்து நடித்தனர்.
இப்போது அனுஷ்காவுக்கு வயதும் ஏறிக்கொண்டே போக, உடற்கட்டும் பெருத்துக் கொண்டே போகிறதாம். இதனால் அனுஷ்காவை தங்கள் படங்களில் ‘டிக்’ செய்ய மறுக்கும் ஹீரோக்கள் பேசாம அனுஷ்காவை கல்யாணம் பண்ணிக்கொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டிலாக சொல்வதோடு, அவருக்குப் பதிலாக புதிய இளம் நடிகைகளை ஜோடியாக்கும் படியும் இயக்குநர்களுக்கு அட்வைஸ் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள்.
இதனால் புதுப்பட வாய்ப்புகளும் குறைய, வயதும் ஏறிக்கொண்டே போவதால் பேசாமல் திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு வெளியேறி விடலாமா? என்று யோசித்து வருகிறாராம் அனுஷ்கா.
கைவசம் ‘பாகுபலி 2’, சூர்யாவுடன் ‘சிங்கம்3’, தெலுங்ங்கில் ஒரு படம் என மூன்றே மூன்று படங்களை மட்டும் வைத்திருக்கிறார் அனுஷ்கா.
இந்தப் படங்களை முடித்துக் கொடுத்தவுடன் அனுஷ்கா திருமணத்துக்கு தயாராகி விடுவார் போலிருக்கிறது.
நல்ல முடிவு அனுஷ்கா ஜி!